செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இவரை ஏமாற்றிய இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்… விழித்துக் கொண்ட சூர்யா

Actor Suriya in two heros subject films: தமிழ் சினிமாவில் சிவக்குமாரின் மகன் என அடையாளத்துடன் களமிறங்கிய சூர்யா தன் கடின உழைப்பாலும் பயிற்சியாலும் மட்டுமே  பார் போற்றும் நிலைக்கு உயர்ந்து உள்ளார்.  இன்று சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் கங்குவாவை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு நேர் மாறாக ஆரம்ப காலங்களில் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கும் கேலி கிண்டலுக்கும் ஆளானவர் தான் சூர்யா. இவரின் திறமையை வெளிப்படுத்தாமல் மற்றொரு நடிகருடன் இணைய வைத்து அவரை ஏமாற்றிய இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் இதோ.

நேருக்கு நேர்:  மணிரத்தினம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில்  விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்தனர். இரண்டு ஹீரோக்கள் எதிர் எதிராக இருந்து விட்டு கடைசியில் ஒன்றிணைவது அக்னி நட்சத்திரத்தை நினைவு படுத்தியது. சூர்யா நடித்த முதல் படம் என்பதால் இவருக்கு கொஞ்சம் காட்சிகளை குறைத்து நடிகையின் பின்னால் ஓட விட்டிருந்தார் இயக்குனர். படத்திற்காக சூர்யா வாங்கின சம்பளமோ ஐம்பதாயிரம் மட்டுமே.

காதலை நிம்மதி: இப்படம் சூர்யாவின் நிம்மதியை கெடுத்தது.  சூர்யா முன்னணி நடிகரான முரளியுடன் இணைந்து நடித்திருந்தார்.  பெரும்பாலான சீன்களில் முரளி நடிக்க வைத்து விட்டு ஓரம்  கட்டப்பட்டிருந்தார் சூர்யா. காதல் செய்ய தேவை ஏற்படாமல் காதலியுடன் இணைத்து வைக்க பட்டிருப்பார் சூர்யா.

Also read: சூர்யாவுக்கு சிக்ஸ் பேக் ஆசையை தூண்டிய 2 ஜிம்பாடி நடிகர்கள்.. இருவரையும் ஓரம் கட்டி வரப்போகும் கங்குவா

பெரியண்ணா: இப்படத்தில் விஜயகாந்துடன் சூர்யா இணைந்து நடித்திருந்தார். விஜயகாந்த்க்கு அழுத்தமான கதையை உருவாக்கி விட்டு பழங்காலத்து கவிஞர் அழகிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் கதையை கொஞ்சம் உல்டாவாக மாத்தி இப்படத்தில் சூர்யாவுக்கு செட் செய்திருந்தனர். பெரிய அண்ணாவை உயர்த்தி விட்டு, சூர்யா இந்த படத்தில் சளைத்து போயிருந்தார்.

பிரண்ட்ஸ்: 2001 இல் சித்திக் இயக்கத்தில் மீண்டும் விஜய், சூர்யா இணைந்து நடித்த படம் பிரண்ட்ஸ். இப்படத்தில் சூர்யா ஓரளவு ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தார் எனலாம். சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு அழுத்தம் குறைவு தான் என்றாலும் தம்பியின் இழப்புக்கு நண்பன் தான் காரணம் என்ற சூழ்நிலையில் துரோகத்திற்கு எதிராக  ஆக்ரோஷமான தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா.

பிதாமகன்: விக்ரமுக்கு சேது, சூர்யாவுக்கு நந்தா என திருப்புமுனையை கொடுத்த பாலாவின் கூட்டணியில் இரண்டாவது முறையாக மூவரும் இப்படத்தில் ஒன்றிணைந்தனர் சூர்யாவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் பிதாமகன் என்றே சொல்லலாம். அந்த அளவு பல கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் விக்ரமோ ஒரு கோடி சம்பளம் வாங்க, இவர் சொற்ப தொகையான 5 லட்சத்தை வாங்கி படத்தை தூக்கி நிறுத்தி இருந்தார்.

Also read: சூர்யாவின் நடிப்பை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. அப்படி என்ன சூப்பர் ஹிட் படம் அது?

Trending News