வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

7 கோடி நஷ்டத்திற்கு வந்த விடிவுகாலம்.. சைக்கோ இயக்குனருக்கு அப்பாவை தூது அனுப்பிய சூர்யா

Actor Suriya sends father to Psycho director: வணங்கான் படத்தில் 24 நாட்கள் சூர்யா நடித்த பின்பு தான் அந்த படம் ட்ராப் ஆனது என்பது அனைவரும் அறிந்தது தான். முன்பு இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரித்தது. இதனால் படம் பாதியிலேயே நின்று போனதால் சூர்யாவுக்கு 7 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகிய போதே, வணங்கான் படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் பணியில் இருந்து ஒதுங்கி விட்டது, இதனால் அந்த ஏழு கோடி காசை சூர்யாவிடம் கேட்கக் கூடாது என சொல்லிவிட்டார் சிவக்குமார். மகனுக்காக இந்த விஷயத்தில் பாலாவிடம் சிவகுமாரே தூது போனார்.

சிவகுமாரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பாலாவும் பணத்தைப் பற்றி சூர்யாவிடம் எதுவுமே பேசவில்லையாம். அதன் பின் வணங்கான் படத்தை கிடப்பில் போடாத பாலா, சூர்யாவிற்கு பதில் அருண் விஜய் வைத்து அந்த படத்தின் பணியை துவங்கினார். சமீபத்தில் வணங்கான் படத்தின் டீசர் கூட வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

Also Read: என்ன பண்ணாலும் சூர்யா விஜய் மாதிரி வர முடியாது.. சிவக்குமார் குடும்பமே இப்படித்தானா?

பண்பு மாறாமல் நடந்த சூர்யா

அதோடு இந்த படத்தை இப்போது பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுட் ப்ரொடக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்போது வணங்கான் படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததும், அந்த சந்தோசமான விஷயத்தை சிவக்குமார், சூர்யாவிற்கு தான் பாலா கால் பண்ணி சொல்லியிருக்கிறார்.

அதன் பின் சூர்யா- பாலா- சிவகுமார் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து பேசி சமரசம் ஆகி உள்ளனர். இப்போது பாலாவிற்கும் சூர்யாவிற்கும் எந்தவிதமான மனக்கசப்பும் இல்லையாம். என்னதான் படப்பிடிப்பு தளத்தில் சைக்கோ மாதிரி டார்ச்சர் செய்த பாலாவிடம் தன்னுடைய தந்தை சிவக்குமாரை அனுப்பி பேசி பிரச்சினையை சுமூகமாக முடித்து பண்புடன் நடந்திருக்கிறார் சூர்யா.

Also Read: வாடிவாசலை விட்டுக் கொடுத்த சூர்யா.. ராயனை களம் இறக்கும் வெற்றிமாறன்!

Trending News