வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கொஞ்சம் அசந்தா பிளாப் ஹீரோன்னு பட்டம் கட்டிடுவீங்களே.. அட, விஜய்யை விட சூர்யா மாஸ் காட்டிட்டாரே!

Suriya: கீழே விழுந்து கிடக்க நான் யானை இல்ல, எழுந்து ஓடுற குதிரைன்னு நடிகர் ரஜினி சொல்லி இருப்பார். இப்போதைக்கு அந்த வசனம் சூர்யாவுக்கு சரியாக அமைந்து விடும் போல.

கங்குவா படத்திற்காக சூர்யா கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பெரும்பாடு பட்டார். ஆனால் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் அதிக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

படத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் சூர்யா மற்றும் ஜோதிகா மீது நிறைய கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விஜய்யை விட சூர்யா மாஸ் காட்டிட்டாரே!

சூர்யா இனி அவ்வளவுதான், முதல் கட்ட ஹீரோ என்ற இடத்திலிருந்து அவர் காலியாகி விட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் கடந்த பத்து வருடங்களாக சூர்யாவுக்கு பெரிய அளவில் வெற்றி கொடுத்த தியேட்டரில் படங்கள் இல்லை என்றும் பேசப்பட்டது.

இது எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் விதமாக ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசர் வீடியோ அமைந்திருக்கிறது.

இனி அடிதடி இல்ல முழுக்க காதல் தான் என அந்த வீடியோவில் சூர்யா வசனம் பேசி இருப்பார்.

உண்மையிலேயே அவர் சினிமா கேரியரில் மீண்டும் காதல் கதைகளை கையில் எடுத்தால் அவருக்கு வெற்றி தான் என்பதை மறைமுகமாக இது குறித்து இருக்கிறது.

பொதுவாக பெரிய ஹீரோக்கள் படங்களின் அப்டேட் வீடியோக்கள் வெளியாகும் போது அது ஒரு மணி நேரத்தில் எத்தனை லைக் மற்றும் வியூஸ் களை பெறுகிறது என பார்ப்பதுண்டு.

அப்படி ரெட்ரோ படத்தை பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு விஷயம் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதில் நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று கோட் படத்தின் கிலிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோ இன்றைய தேதி வரை 574K லைக்குகளை பெற்றிருக்கிறது.

ஆனால் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியான ரெட்ரோ படத்தின் டீசர் 702K லைக்குகளை பெற்றிருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்னாடி வெளியான விஜய் படத்தை விட ஒரு வாரத்திற்கு முன் வெளியான சூர்யா படத்தின் டைட்டில் டீசர் வீடியோ அதிக லைக்குகளை பெற்றிருக்கிறது.

இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Trending News