புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வைரலாகும் கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.. இரட்டை வேடத்தில் மிரட்டும் சூர்யா 

Actor Suriyas Kanguva movie second look poster: சிறுத்தை சிவா இயக்கத்தில்  சூர்யா தனது அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டும் படம் தான் கங்குவா. இந்த படம் அரசகால கதை போல அமைக்கப்பட்டிருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிறது.

இந்த போஸ்டரின் மூலம் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பொங்கல் ஸ்பெஷல் ஆக இப்போது வெளியாகி இருக்கும் கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில், ஒரு சூர்யா ஷார்ட் ஹேரில் கோட் சூட் அணிந்து கண்ணில் கனல் தெறிக்கும் வகையிலும், இன்னொரு சூர்யா வாளுடன் சைடு போசில் மிரட்டுகிறார்.

இந்த போஸ்டரை பார்க்கும்போதே, சும்மா மிரட்டலா இருக்குது! ஏற்கனவே இந்த படம் பத்து மொழிகளில், 3டி தொழில் நுட்பத்தில் தயாராகுவதால், நிச்சயம் கங்குவா படத்தில் மூலம் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இந்திய திரையுலகமே மறக்க முடியாத சம்பவத்தை  செய்யப் போகின்றனர்.

Also Read: 3 வருடங்களுக்கு வரிசை கட்டி நிற்கும் கமலின் 7 படங்கள்.. விக்ரமை மிஞ்சுமா கமலின் KH237?

கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

அதுமட்டுமல்ல சூர்யாவின் சினிமா கேரியரில் கங்குவா படம் தான் ரிலீஸ்க்கு முன்பே இதுவரை 400 ப்ரீ பிசினஸ் ஆகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சோசியல் மீடியாவில் பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தற்போது கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது, அது மட்டுமல்ல கங்குவா படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே விஜய் ‘தி கோட்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதேபோல் சூர்யாவும் கங்குவா படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

கங்குவா செகண்ட் லுக் போஸ்டர்

Kanguva2ndLook-cinemapettai
Kanguva2ndLook-cinemapettai

Also Read: வெங்கட் பிரபுவின் கோரத்தாண்டவம்.. விஜய் கொடுக்கும் டார்ச்சரால் ரணகளமாக மாறிய படப்பிடிப்பு

Trending News