ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடுத்தடுத்து வெளியாக உள்ள சூர்யாவின் 5 மிரட்டலான படங்கள்.. வாடிவாசலுக்கு பின் சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் கூட்டணி

Actor Suriya: கோலிவுட்டின் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படுகின்ற சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தோடு சேர்த்து மொத்தமாக அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூர்யா 43’ படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதத்தில் துவங்க போகின்றனர். இதன் தொடர்ச்சியாக பிரபல இந்தி இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தான் சூர்யா பாலிவுட்டிற்கு என்ட்ரி ஆகிறார்.

இதன் ஸ்டோரி முழுக்க முழுக்க மகாபாரத கர்ணன் கதையை மையமாக வைத்து உருவாகுவதால் படத்திற்கு டைட்டில் ‘கர்ணா’ என்று வைத்துள்ளனர். இதில் சூர்யா, கர்ணனாக நடிக்கிறார். மேலும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டிவிட்ட சூர்யா, மறுபடியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் கேரக்டரை மட்டுமே மையமாகக் கொண்டு ‘இரும்புக் கை மாயாவி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

Also Read: 4 நடிகர்களுக்கு பாலா கொடுத்த எதிர்காலம்.. பட்ட கஷ்டத்தை மறந்து சூர்யா செய்த வேலை

சூர்யா கைவசம் இருக்கும் படங்களின் லிஸ்ட்

லோகேஷ், ‘ரஜினி 171’ படத்தை முடித்துவிட்டு அதை தொடர்ந்து கார்த்தியின் கைதி 2 படத்தையும் எடுத்த பிறகு இரும்புக் கை மாயாவி படப்பிடிப்பில் சூர்யாவுடன் இணைவார். அதேபோல் தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேடி உடனும் சூர்யா ஒரு ப்ராஜெக்ட்டில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை கேட்டுவிட்டு அதற்கு ஓகேவும் சொல்லிவிட்டார். இப்போது இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் மற்றும் முன்கள பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த ஐந்து படங்களுடன் இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் TJ ஞானவேல் மற்றும் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார், மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி ஆகிய மூன்று இயக்குனர்களும் சூர்யாவிற்காகவே எழுதப்பட்ட கதையையும் அவரிடம் சொல்லிவிட்டனர். ஆனா இந்த மூன்று இயக்குனர்களின் படங்களை வாடிவாசலுக்கு பிறகு அடுத்தடுத்து நடித்துக் கொடுக்க சூர்யா முடிவெடுத்துள்ளார்.

Also Read: 80 வயதை தாண்டியும் நிஜ வாழ்க்கையில் பக்குவம் இல்லாத 2 பிரபலங்கள்.. ஊருக்கு உபதேசம் பண்ணும் குடும்பம்

Trending News