வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மயிலு பொண்ணு குயிலுடன் ரொமான்ஸ் பண்ண தயாராகும் சூர்யா.. இது நியாயமா கர்ணா?

Actor Surya joined bollywood actress for Karna pan india movie: ஏழாம் அறிவு  படத்தில் சூர்யா பல்லவ இளவரசனாக ஒரு சில  காட்சிகளில் வந்திருந்தாலும்  இளவரசனுக்கு உரிய அங்கலட்சணங்களுடன் கம்பீரமாக காட்சியளித்திருப்பார். தற்போது சரித்திர பின்னணியை கதை அம்சமாக கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூர்யா.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் இந்திய திரை உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் படக்குழுவினர். வருகின்ற ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் கங்குவாவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

கங்குவாவை அடுத்து இரு சரித்திர கதையில் ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சூரரைப் போற்று புகழ் சுதா கோங்குரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்திலும் பாலிவுட்டில் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில். வரலாற்று பின்னணி கொண்ட மகாபாரதகதையில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

Also read :சூர்யாவுக்கு சிக்ஸ் பேக் ஆசையை தூண்டிய 2 ஜிம்பாடி நடிகர்கள்.. இருவரையும் ஓரம் கட்டி வரப்போகும் கங்குவா

சூர்யா 43 என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக  பலரது பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தேர்வாகியுள்ளார். சிவக்குமார் மற்றும் ஸ்ரீதேவி நடித்த “கவிக்குயில்”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” போன்ற படங்கள் இன்றும் பேசப்படுகிறது. அதை போல் திரைத்துறையில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது சூர்யா மற்றும் ஜான்விகபூரின் ஜோடி.

வடகிழக்கு பருவக்காற்று தென்னகத்தை தாக்குவது போல் இந்தியில் மட்டுமே நடித்து வந்த  ஜான்வி கபூரின் பார்வை தெற்கே பதிந்து உள்ளது. சமீபமாக தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் தேவார என்ற படத்தில் நடித்துள்ளார். தன்னுடைய தாயைப் போன்றே திறமையுடன் தனக்கான படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வரும் ஜான்வி கபூர் அதிக வயது வித்தியாசம் கொண்ட நடிகர்களுடன் நடிப்பது ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.

கர்ணன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தோன்றும் ஜான்வி கபூரின் வயது 26 அதாவது சூர்யா வயதில் பாதிக்கு சற்று அதிகமானது அவ்வளவுதான். அழகு திறமையுடன் கவர்ச்சியை சற்று தாராளமாக காட்டி பிரம்மாண்ட பட்ஜெட் பட இயக்குனர்களின் விருப்பத்தேர்வாக இருந்து வருகிறார் நடிகை ஜான்வி கபூர். சூர்யாவோ தந்தையே மிஞ்சிய தனயனாக 46 வயதிலும் இளமை தோற்றத்துடன் கம்பீரமாக உள்ளார்.  மகாபாரதத்தில் அனைவரும் விரும்பும் பாத்திரமான கர்ணனை ஏற்று உள்ள சூர்யா மற்றும் ஜான்விகபூரின் ஜோடி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Also read: 1000 கோடி வசூலை எதிர்பார்த்து வெளிவர உள்ள பிரம்மாண்டமான 6 படங்கள.. கங்குவாவை மிஞ்சுமா காந்தாரா!

Trending News