வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தேசிய விருது வாங்கியதில் இருந்தே நேரம் சரியில்லை.. சூர்யாவின் வாழ்க்கையில் விளையாடும் விதி

நடிகர் சூர்யா ஒட்டுமொத்த இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அடுத்தடுத்து சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். இதில் நடிகர் சூர்யாவுக்கு சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள், தேசிய விருது என தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக மாறினார் நடிகர் சூர்யா. அதே நேரத்தில் சூர்யா அவருடைய குருவான இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருந்த வணங்கான் திரைப்படம் எந்த ஒரு காரணமும் இன்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு சூர்யா தரப்பிலிருந்து விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

Also Read: நட்புக்காக ஒரு பைசா கூட வாங்காமல் நடித்த 5 நடிகர்கள்.. ஆண்டவருக்காக வில்லனாக மாறிய சூர்யா

வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா பாதியிலேயே விலகிய நிலையில், அவருடைய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் தான். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பும் சரியான நேரத்தில் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தன்னுடைய 42வது திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படம் வரலாற்று கதையை மைய்யமாகக் கொண்டது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. சூர்யா 42 வில் பாலிவுட் நடிகை திஷா பதானியும் இணைந்திருக்கிறார்.

Also Read: அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

நடிகர் சூர்யா இந்த திரைப்படத்திற்குப் பிறகு, வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் பண்ணலாம் என்று பிளான் பண்ணி இருந்தா. ஆனால் தற்போது சுதா கொங்கராவிற்கு அடிபட்டு இருப்பதால் அவருடனும் அந்த படத்தை தொடங்க வாய்ப்பு இல்லை.

இப்போதைய நிலவரத்தை பார்த்தால் இயக்குனர் வெற்றி மாறனும் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்குவதற்கு வாய்ப்புகள் இல்லை. சுதா கொங்கரா திரைப்படத்தில் நடிக்கும் திட்டமும் சொதப்பல் ஆகிவிட்டது. நடிகர் சூர்யா தன்னுடைய 42 ஆவது திரைப்படத்திற்கு பிறகு யாருடன் இணையப் போகிறார், அந்தப் படத்தின் வேலைகளாவது முழுவதும் நடக்குமா என்று தெரியவில்லை.

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் சூர்யா.. சுதா கொங்கரா படத்திற்கு முன் போடும் மாஸ்டர் பிளான்

Trending News