திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கும் சூர்யாவின் மொத்த பட லிஸ்ட்.. இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யா 42

நடிகர் சூர்யாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கோலிவுட்டில் ஏறுமுகம் தான். தியேட்டர் ரிலீஸ்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையாவிட்டாலும், ஓடிடியில் ரிலீசான ‘சூரரை போற்று’ ‘ஜெய் பீம்’ படங்கள் சூர்யாவுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. தேசிய விருது பெற்றது மட்டுமல்லாமல் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் அகாடமியின் ஸ்பெஷல் ஜூரி குழுவில் இணைய அழைப்பும் வந்து இருக்கிறது.

அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் சூர்யாவின் மொத்த பட லிஸ்ட்:

1. சூர்யா-சிறுத்தை சிவா: சூர்யாவின் 42வது படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்த படம் 3டி முறையில் உருவாகும் சரித்திர திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சூர்யா அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

Also Read: அடுத்த தேசிய விருதுக்கு ரெடியாகும் சூர்யா.. மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி

2.சூர்யா-ஞானவேல்: சூர்யாவை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேலுடன் சூர்யா அடுத்த படத்தில் இணைய இருக்கிறார். இந்த படம் இவர்களின் முந்தைய படத்தை போன்று சமூக நலன் சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

3.சூர்யா-சுதா கொங்கரா: கடந்த 2021 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. இந்த படம் சூர்யாவை உலக அளவில் கொண்டு சேர்த்து. இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்திருக்கிறார்.

Also Read: பொருத்து பொருத்து பார்த்து பொங்கி எழுந்த சூர்யா.. வணங்கான் படப்பிடிப்பில் பாலா செய்த 5 தில்லாலங்கடி வேலை

4.வாடிவாசல்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டது. நடிகர் தனுஷை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த வெற்றிமாறன் முதன்முறையாக சூர்யாவுடன் இணைகிறார்.

5.வணங்கான்: நந்தா, பிதாமகன் என சூர்யாவுக்கு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பாலாவுடன் சூர்யா மீண்டும் இணைந்திருக்கும் படம் வணங்கான். இந்த படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாகிறார்.

Also Read: ரிலீசுக்கு முன்பே கொடி கட்டி பறக்கும் பிசினஸ்.. எதிர்பார்ப்பைக் கிளப்பிய சூர்யா சிறுத்தை சிவா கூட்டணி

Trending News