Thalaivaasal Vijay best 6 movies: நடிகர் தலைவாசல் விஜய் துணை கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அடையாளத்தை பெற்றவர். இவர் ஏற்று நடிக்காத கேரக்டர்களே இல்லை என சொல்லலாம். நண்பனிலிருந்து அப்பா கேரக்டர் வரை அற்புதமாக நடிக்கக்கூடிய இவர், வில்லத்தனத்திலும் மிரட்டி விடுவார். இவருடைய நடிப்பில் இந்த ஆறு படங்கள் என்றுமே மக்களால் மறக்க முடியாது.
தேவர் மகன்: உலகநாயகன் கமலஹாசன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தேவர்மகன் திரைப்படத்தில், சிவாஜியின் மூத்த மகனாக தலைவாசல் விஜய் நடித்திருப்பார். மதுவுக்கும், சீட்டாட்டத்திற்கும் அடிமையாகிப் போன இவர், சிவாஜி இறந்த பின்பு தலைக்கு மீறிய போதையில் நடந்து வர கூட முடியாமல் சுடுகாட்டில் வந்து கொல்லி வைக்க வருவது அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கும்.
மகாநதி: உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் மகாநதி. இதில் ஒரு காட்சியில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் மனதில் நின்று இருப்பார். சின்ன வயதில் தொலைந்து போகும் கமலஹாசனின் மகன், தெருக்கூத்து ஆடுபவர் ஆன தலைவாசல் விஜய் வீட்டில் வளர்ந்து கொண்டிருப்பான். கமல் தன் மகனை கண்டுபிடித்து திரும்ப அழைத்துச் செல்ல வரும்பொழுது, வளர்த்த பாசத்தில் கண்கலங்கும் இவரின் நடிப்பு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
மகளிர் மட்டும்: கதாநாயகிகளை மட்டுமே மையமாக வைத்து, வேலைக்கு செல்லும் பெண்களின் உண்மை நிலையை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கும் படம் தான் மகளிர் மட்டும். இந்த படத்தில் ஆபீஸில் சுத்தம் செய்யும் பெண்ணாக பாப்பம்மா என்னும் கேரக்டரில் ரோகினி நடித்திருப்பார். ரோகினியின் கணவராக நடித்த தலைவாசல் விஜய் இறந்த நாகேஷ் உடலுடன் சண்டை போடும் காட்சி இன்று வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைகளில் ஒன்று.
உன்னை நினைத்து: நடிகர் சூர்யா, லைலா, சினேகா நடித்த உன்னை நினைத்து படத்தை பார்த்தவர்கள் தலைவாசல் விஜய் கேரக்டரை வெறுத்துப் போய்விடுவார்கள். பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் தலைவாசல் விஜய் எப்படியாவது தன் மகளின் மூலமாக குடும்பத்தை முன்னேற்றி விட வேண்டும் என்று செய்யும் வேலைகள் படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கும்.
Also Read:நடிச்ச அஞ்சு படமும் அட்டர் பிளாப்.. மணிரத்தினம் கைகொடுத்தும் கரை சேர முடியாத நடிகை
சிம்மராசி: சரத்குமார் மற்றும் குஷ்பூ நடித்த சிம்மராசி படத்தில் தலைவாசல் விஜய் பிளாஷ்பேக் ஆட்சியில் நடிகை கனகாவின் கணவராக நடித்திருப்பார். மேனேஜரிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்ட இவர் அவரை சமாளிக்க தன் மனைவியை அவருடைய ஆசைக்கு இணங்க சொல்லி துன்புறுத்தி, இறுதியில் கனகா இறந்து விடுவார். இந்த காட்சிகள் பார்ப்பதற்கே ரொம்ப கொடூரமாக இருக்கும்.
துள்ளுவதோ இளமை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷின் அப்பாவாக தலைவாசல் விஜய் நடித்திருப்பார். வசதியான பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் மகனை படிக்க வைக்கும் நடுத்தர வர்க்கத்தை இவர், மகனை கண்டிப்புடன் வளர்க்கும் தந்தையாக நடித்திருப்பார்.
Also Read:டீச்சர் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய 6 பிரபலங்கள்.. ஒரு படி மேலே சென்ற ராட்சசி ஜோ