வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சில்க் ஸ்மிதாவுடன் கிசுகிசுக்கப்பட்ட தாடி நடிகர்.. நான் இல்லன்னு இப்ப கதறி என்னத்துக்கு

தனது காந்தப் பார்வையால் இளசுகளை கட்டிப்போட்டவர் சில்க் ஸ்மிதா. அவர் இறந்தாலும் தற்போது வரை பலர் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்து வருகிறார். சினிமாவில் முன்னணி நடிகைகளாக உள்ள சிலர் தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் கிசுகிசு வருவது வழக்கமாக ஒன்றுதான்.

அதிலும் சில்க் ஸ்மிதா பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்ததால் சொல்லவா வேண்டும். சில்க் ஸ்மிதா பல நடிகர்கள், இயக்குனர்கள் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இவர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளிலேயே தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அப்போதைய பத்திரிக்கை ஒன்றில் சில்க் ஸ்மிதா தாடி நடிகருடன் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் எழுதப்பட்டிருந்தது. சில்க் ஸ்மிதா காலத்தில் முதன்முதலாக தாடி வைத்து நடித்த ஒரே நடிகர் தியாகராஜன். இவரும், சில்க் ஸ்மிதாவும் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் நீங்கள் கேட்டவை போன்ற பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதனால் இவருடன் தான் சில்க் ஸ்மிதா தொடர்பில் உள்ளார் என்பது போல பலரும் பேசப்பட்டனர். ஒரு பேட்டியில் இதைப்பற்றி தியாகராஜனிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் அதை மறுத்து தியாகராஜன் பனை மரத்துக்கு கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் கல்லுனு தான் சொல்லுவாங்க என்ற பழமொழியை கூறினார். அந்த மாதிரிதான் சில்க் ஸ்மிதாவுடன் அந்த தாடி நடிகர் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அது நான் இல்லை, வேறு ஒரு நடிகர் அதனால் அந்த செய்தி என்னை பெரிதாக பாதிக்கவில்லை என தியாகராஜன் கூறியிருந்தார்.

அதைக் கேட்ட பலரும் தாடி நடிகர் என்றால் இவர் தானே என்று நினைத்து இருந்தோம் என ஆச்சரியம் அடைந்தனர். நமக்கு தெரிந்த தாடி நடிகர் அவர் ஒருவர் மட்டும்தான். அவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை கூட தொட்டுக் நடிக்க மாட்டார். அப்படி என்றால் அந்த தாடி நடிகர் யாராக இருக்கும்.

Trending News