வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த தளபதி.. ட்ரெய்லருக்கே விழி பிதுங்கும் பெரிய தலைகள்

Thalapathy Vijay: கண்ணா இது வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் இனிமே தான் ஆரம்பம் என ஒரு பிரபலமான வசனம் இருக்கிறது. இது இப்போது தளபதி விஜய் சொன்னால்தான் சரியாக இருக்கும். அந்த அளவுக்கு தன்னுடைய அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். புலி இவ்வளவு நாளும் பதுங்கி இருந்தது இப்படி ஒரு பாய்ச்சலை காட்டுவதற்காகத்தான் என்பதை நெற்றியில் அடித்தது போல் தமிழ்நாட்டில் உள்ள பெரிய தலைகள் அத்தனை பேருக்கும் உணர்த்திவிட்டார்.

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். கட்சியின் கொள்கை, நோக்கம், கட்சிக்கு என்று சமூக வலைத்தள பக்கம் என சூட்டோடு சூட்டாக அத்தனையையும் முடித்து விட்டார். தமிழக அரசியலையே பரபரப்பாகி விட்டு இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் தனக்கு என்ன வந்தது என GOAT பட சூட்டிங்கில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

என்னதான் பெரிய பெரிய அரசியல்வாதிகள் அரசியல் என்பது ஒரு கடல் யார் வேண்டுமானாலும் வரலாம், விஜய் அரசியலுக்கு வருவது எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, எங்கள் கட்சியின் ஓட்டுகளை அவரால் எதுவும் செய்ய முடியாது என வெளியில் மார்தட்டி கொண்டாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன கலக்கத்துடன் தான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தான்.

Also Read:விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர்.. மற்ற படங்களை ஓரங்கட்டி விட்டு தளபதிக்கு கொடுக்கும் முன்னுரிமை

சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அங்கே அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூடிவிட்டனர். அத்தனை பேரும் ஒரே இடத்தில் கூடியதில் அந்த இடமே ஸ்தம்பித்து விட்டது. விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பூமாலையோடு வந்து விஜய் உடைய அரசியல் வரவுக்கு ஆதரவை தெரிவித்து இருந்தார்கள்.

அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த தளபதி

இது விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு பிறகு நடக்கும் முதல் சம்பவம் கிடையாது. விஜய் ஏற்கனவே தன்னுடைய ரசிகர்களின் பவரை நிறைய இடங்களில் காட்டியிருக்கிறார். அதில் முக்கியமான நிகழ்வை சொல்ல வேண்டும் என்றால் மாஸ்டர் படம் சூட்டிங் நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது, விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்தது தான். அப்போது விஜய் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோ இன்று வரை பிரபலம்.

பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு காசு கொடுத்து ஆள் சேர்ப்பது உண்டு. ஆனால் விஜய்க்கு இப்போது சேர்வது தானாக சேர்ந்த கூட்டம். இந்த விஷயம் தான் அரசியல்வாதிகளை ரொம்ப கலக்கமடைய செய்திருக்கிறது. கட்சி ஆரம்பித்த ஒன்று இரண்டு நாட்களில் தனக்காக சேரும் கூட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டி, தன்னுடைய அரசியல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் தளபதி.

Also Read:தளபதியை இயக்கும் 5 கைகள்.. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் விஜய்

Trending News