சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிகர் வடிவேலுவின் சிறந்த 5 கேரக்டர்கள்.. பெஸ்ட் நடிகருக்கான அவார்டு கொடுக்கலாம் போல

வடிவேலு மிகச்சிறந்த நடிகராகவும், பாடகராகவும் நிரூபித்து விட்டார். அவர் சினிமாவில் ரஜினி, கமல், அர்ஜூன், விஜய், அஜித் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி காமெடியனாக வலம் வந்தார். அதன்பின், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம் மூலம் ஹீரோவானார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டு.

அதன்பின், இந்திர லோகத்தில் நா அழக்கப்பன் படத்திலும் ஹீரோவாக நடித்தார். அது கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதையடுத்து, சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின் மீண்டும் மாரி செல்வராஜின் மாமன்னன் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். வடிவேலு, பல நூறு படங்களில் காமெடியனாக, குணச்சித்திர நடிகராக நடித்திருந்தாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவரது சிறந்த 5 கேரக்டர்கள் பார்க்கலாம்.

தேவர் மகன் – எசக்கி

கமல், சிவாஜி, ரேவதி, கெளதமி, நாசர் நடிப்பில் , பரதன் இயக்கத்தில் 1992 ல் வெளியான படம் தேவர் மகன். இப்பட த்தில் எசக்கி என்ற கேரக்டரில் வடிவேலு நடித்திருப்பார். ஒரு கோயிலின் பூட்டை உடைத்த தற்காக அவரது கை வெட்டப்படும். இதில், கதாப்பாத்திரத்தோடு ஒன்றிப்போய் வடிவேலு நடித்திருப்பார். இது எல்லோராலும் பாராட்டப்பட்டது.

வின்னர் – கைப்புள்ள

பிரசாந்த் , கிரண் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் 2003 ல் வெளியான படம் வின்னர். அதிரடி ஆக்சன், காமெடி கலந்த படமாக உருவானது. இப்பட ஷூட்டிங்கின் போது வடிவேலுக்கு காலில் அடிபட, அதையே தனக்கான கேரக்டராக வடிவேலு மாற்றி இதில் கைப்புள்ள வேடத்தில் நடித்திருப்பார். இது வடிவேலுவின் எவர் கிரீ காமெடி கேர்கடர் ஆகும்.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி

தன்னால் ஹீரோவாகவும் நடித்து ஹிட் கொடுக்க முடியும் என்று வடிவேலு நிரூபித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம். வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில், சொல்புத்தி உடையவர், சுயபுத்தி உடையவர் என இரண்டு வேடத்தில் சிறப்பாக நடித்து, காமடி, ஆக்சனின் சூப்பராக நடித்திருந்தார்.

மருதமலை – ஏகாம்பரம்

அர்ஜூன், நிலா நடிப்பில், வீனு ரவிச்சந்திரன், சுராஜ் இயக்கத்தில் 2007 ல் வெளியான படம் மருதமலை. இதில் ஏட்டு ஏகாம்பரம் என்ற போலீஸ் கேரக்டரில் வடிவேலு நடித்திருந்தார். இப்பட த்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும் தரமாக இருக்கும்.

மாமன்னன்

உதயநிதி, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில், வடிவேலு நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2022 ல் வெளியானது. அரசியல் களத்தில் பரபரப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவானது. இதில் வீராவாக உதயநிதியும், மாமன்னாக வடிவேலுவும் சிறப்பாக நடித்திருந்தனர். அவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது.

Trending News