சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இப்ப வர விஷால் பயங்கரமாக ரீல் விட்ட 4 விஷயங்கள்.. மார்க் ஆண்டனி டிக்கெட்டில் அடித்த நாமம்

Actor Vishal: செல்லமே படத்தில் அறிமுகமாகி சண்டக்கோழி, திமிரு போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விஷால் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையே இருந்தது. ஆக்ஷன் கிங் அர்ஜுனனுக்கு பிறகு விஷால் கண்டிப்பாக அதிரடி ஆக்சன் ஹீரோவாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். கடைசியில் அவர் அழுகாட்சி ஹீரோவாக மாறியது தான் மிச்சம்.

அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த நடித்திருக்க வேண்டிய இவர், தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து மொத்தமாக தன்னுடைய இமேஜுக்கு ஆப்பு வைத்துக் கொண்டார். தேர்தல், நடிகர் சங்கம், திருமணம் என அத்தனையுமே இவரை சர்ச்சை நாயகனாக மக்கள் முன் காட்டியதால் இருந்த பெயரும் போய்விட்டது. இவர் இன்று வரை இந்த நான்கு விஷயங்களை வாய்சவாடாலாக சொல்லி செய்யாமல் ஏமாற்றி வருகிறார்.

Also Read:உதயநிதியை மறைமுகமாக வறுத்தெடுத்த விஷால்.. எங்கேயோ செமத்தயா வாங்கி இருப்பார் போல

தியேட்டரில் ஒரு படம் ரிலீஸ் ஆன ஒரு மணி நேரத்திலேயே அதை திருட்டுத்தனமாக வெளியிட்டு வந்தார்கள் தமிழ் ராக்கர்ஸ். இந்த வெப்சைட்டை எப்படியாவது நான் ஒழித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்த விஷால், தமிழ் ராக்கர்சை ஒழித்தும் விட்டோம் என சொன்னார். ஆனால் இப்போதெல்லாம் படம் ரிலீஸ் ஆகி 1/2 மணி நேரத்திலேயே தெளிவான பிரிண்ட் உடன் லிங்கே வந்து விடுகிறது.

சினிமாவுக்கு வந்ததே தென்னிந்திய நடிகர் சங்கத்தை காப்பாற்றி அந்த சங்கத்திற்கென ஒரு கட்டிடம் கட்டுவதற்கு தான் என்பது போல் மிகப் பெரிய பில்டப் கொடுத்தார் விஷால். தேர்தலில் ஜெயித்தவுடன் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என நினைத்தால் இன்றுவரை அது இடியாப்ப சிக்கலாக தான் இருக்கிறது. அந்த கட்டிடத்தில் தான் நான் கல்யாணம் பண்ணுவேன் என சவால் விட்ட விஷாலும் 40 வயதை தாண்டியும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.

Also Read:விஷால் கூடவே இருந்து குழி பறித்த 4 பேர்.. நண்பன் என்று சொல்லியே முதுகில் குத்திய துரோகிகள்

ஒரு சில படங்களில் நடித்து வெற்றி கண்டதும் விஷால் தன்னுடைய பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் ஒரு சில படங்களையும் எடுத்தார், அது மொத்தமும் பிளாப் லிஸ்டில் தான் இருக்கிறது. இதில் அவ்வப்போது சில மேடைகளில் கடன் வாங்கித்தான் நான் படம் தயாரிக்கிறேன், என் தங்கச்சி கல்யாணத்திற்கு கூட காசு இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டேன் என சொல்லி வருகிறார்.

திண்ணையில் இருந்தவனுக்கு அடிச்ச தான் யோகம் என்பது போல், விஷாலுக்கு திடீர் வெற்றி படமாக அமைந்தது தான் மார்க் ஆண்டனி. ரிலீஸ் ஆகி ஒரு சில நாட்களிலேயே கோடிக்கணக்கில் வசூல் ஆனதும், விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட் இருக்கும் ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு கொடுக்கப் போகிறேன் என்று சொன்னார். ஆனால் இன்று வரை அதற்கான எந்த ஏற்பாடும் நடக்கவில்லை.

Also Read:கமலின் உண்மை முகத்தை கிழித்தெறிந்த எக்ஸ் மனைவி.. இப்படியெல்லாமா அசிங்கபடுத்துறது

Trending News