ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யை விடாமல் துரத்தி பிடித்த ரஜினி பட இயக்குனர்.. பல நூறு கோடி முதலீட்டிற்கு சன் பிக்சர்ஸ் உடன் போட்டி போடும் நிறுவனம்

Actor Vijay confirmed the Director Karthik Subburaj for Vijay 69 movie: பொது இடங்களில் கம்முனு நடிப்பில் ஜம்முன்னு இருக்குற நம்ம இளைய தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிசியாக உள்ளார். எப்போதும் ஒரு படம் பண்ணும் போதே அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருப்பது விஜய்யின் வாடிக்கை. தளபதி விஜய் தற்போது விஜய் 69 படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்  கோட் படத்திற்காக விஜய் உடன்  சினேகா பிரபுதேவா பிரசாந்த் லைலா  ஜெயராம் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.  சயின்ஸ் பிக்சன், டைம் டிராவல், திரில்லர் என பலவற்றை கலந்து வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் தரமான மசாலாவாக ரெடியாகி வருகிறது G.O.A.T.

இலங்கை, தாய்லாந்து என பல்வேறு இடங்களில் நடந்து வரும் G.O.A.T படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  வருகின்ற ஜூன் மாதம் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின் போது G.O.A.T படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Also read: விஜய் கூட கொஞ்சல்ஸ் மட்டும் தான்.. விரைவில் டும் டும் டும்-க்கு ரெடியான க்யூட் ஜோடி

இந்தப் படத்தோடு நிறுத்திவிட்டு விஜய் அரசியலுக்கு போகப் போகிறார் என்ற செய்தி பரவி வந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் விஜய் 69 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தளபதி. விஜய் தனது அடுத்த படத்திற்கு வெற்றிமாறன், மாரி செல்வராஜ், ஹச் வினோத், சிறுத்தை சிவா என பலரிடமும் கதை கேட்டு வந்த நிலையில் சூப்பர் ஸ்டாரை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை பிக்ஸ் பண்ணி உள்ளார் விஜய்.

ஏற்கனவே விஜய்யுடன் படம் பண்ணுவதை தனது கனவாக கொண்டிருந்த கார்த்திக் சுப்புராஜ் விஜய்க்காக கதை ரெடி பண்ணி அது விஜய்க்கு திருப்தி ஏற்படுத்த தவறவே மீண்டும் விஜய்யின் விருப்பத்திற்கு இணங்க தரமான கதையை ரெடி பண்ணி அணுகியுள்ளாராம். விஜய்க்கு இந்த கதை பிடித்ததால் கார்த்திக் சுப்புராஜ் கைகோர்க்க உள்ளார் விஜய்.

விஜய் 69 காக சன் பிக்சர்ஸ்,  தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் DVV  என்டர்டைன்மென்ட்,  வேல்ஸ் என தயாரிப்பு நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது. விஜய் என்ற பெயருக்காகவே படங்கள் ஹிட் அடிக்க துவங்கியதால்  தயாரிப்பு நிறுவனமோ பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்யும் முனைப்போடு விஜய்யின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று இருக்கின்றனராம் தயாரிப்பு நிறுவனங்கள்.

Also read: ரஜினிக்கு போட்டியா உச்சம் தொடும் விஜய்யின் சம்பளம்.. அரசியல் என்ட்ரிக்கு முன் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்

Trending News