Vijay deverakonda : 35 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் சாக்லேட் பாய்.. 11 ஆண்டுகளில் விஜய் தேவரகொண்டா சேர்த்த சொத்து மதிப்பு

vijay-deverakonda
vijay- deverakonda

விஜய் தேவர் கொண்டா சினிமாவில் வந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் முக்கிய இடத்தில் இருக்கிறார். பெரும்பாலும் துள்ளலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் தேவர் கொண்டா பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இவர் இன்று தனது 35 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேமிலி ஸ்டார் படம் விமர்சன ரீதியாக தோல்வியுற்றது. அதுவும் இந்த படத்தில் மோசமான வசனங்கள் இடம் பெற்றதாக சர்ச்சையும் கிளம்பி இருந்தது.

அதையெல்லாம் தூர வைத்து விட்ட தனது அடுத்த பட வேலையில் விஜய் தேவர் கொண்டா கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ராஸ்மிகா மந்தனாவுடனும் விஜய் தேவரகொண்டா கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் 11 வருட சினிமா வாழ்க்கையில் அவர் சேர்த்து வைத்த சொத்து மதிப்பை பார்க்கலாம்.

விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு

விஜய் தேவரகொண்ட ஒரு படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். மேலும் இவரது சொத்து மதிப்பு 8 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 66 கோடி ஆகும். ஹைதராபாத்தில் உள்ள ஜிப்ரீ ஹில்ஸின் சுற்றுப்புறத்தில் 15 கோடி மதிப்பிலான சொந்த வீடு இவருக்கு உள்ளது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் விஜய் தேவரகொண்டா முதலீடு செய்து உள்ளார். இவர் கார் பிரியர் என்பதால் பலவகையான கார்களை வைத்திருக்கிறார். அந்த வகையில் 24 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 வைத்துள்ளார்.

அடுத்ததாக 61 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் ஜிஎல்எஸ் 350, 80 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ27, 1.31 கோடி மதிப்பிலான வால்வோ எக்சி 90, 4 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் ஆகிய கார்கள் விஜய் தேவரகொண்டா கைவசம் இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner