ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தொடர்ந்து 5 பிளாப் படங்களை கொடுத்த விஜய்.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்கள்

தற்சமயம் தமிழ்சினிமாவில் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கும் தளபதி விஜய் உடைய ஆரம்பகால படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் இவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 5 படங்களுமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து தயாரிப்பாளர்களை திக்குமுக்காட வைத்தது.

நாளைய தீர்ப்பு: கடந்த 1992 ஆம் ஆண்டு தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில், தாய் ஷோபா திரைக்கதையில் விஜய்யை கதாநாயகனாக வைத்து ‘நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படத்தை ஷோபா சந்திரசேகர் தயாரித்து வெளியிட்டார். அந்த படம் விஜய்யை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய முதல் படம். ஆனால் அதில் விஜய்க்கு நடித்த அனுபவம் இல்லை என்ற காரணத்தினாலும், நடிப்பு அப்படியே அப்பட்டமாக தெரிந்ததாளும் ரசிகர்களுக்கு அந்தப் படம் பிடிக்காமல் போய்விட்டது. இதனால் முதல் படமே தளபதி விஜய்க்கு படுதோல்வியாக அமைந்தது.

ரசிகன்: விஜய் நடிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ரசிகன்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கவி கதாநாயகியாக நடித்திருப்பார். இவர்களுடன் விஜயகுமார், கவுண்டமணி, செந்தில், மனோரமா, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தாலும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படமாகவே இருந்ததன் காரணமாக விஜய் கொடுத்த ப்ளாக் படமாகவே பார்க்கப்படுகிறது.

விஷ்ணு:கடந்த 1995ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையின் இயக்கத்திலேயே நடித்த விஷ்ணு திரைப்படமும் விஜய்க்கு எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இதிலும் சங்கவி தான் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்தப்படத்தின் கதை ரசிகர்களின் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், சாதாரணமான திரைக்கதையாக இருந்ததால் திரையரங்கில் ஓடாமல் பிளாக் ஆகிவிட்டது.

ராஜாவின் பார்வையிலே: அதே ஆண்டிலேயே தற்போது சினிமாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தல, தளபதி இருவரும் சேர்ந்து இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தை ஜானகி சௌந்தர் இயக்க இந்திரஜா, வடிவேலு உள்ளிட்டோர் சேர்ந்து நடித்திருப்பார்கள். இந்தப்படமும் எதிர்பார்த்த அளவு ஓடாமல் ஏமாற்றத்தை பெற்றுத்தந்த படமாகவே அந்த காலத்தில் கருதப்பட்டது.

தேவா: அதே ஆண்டிலேயே எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், சுவாதி, சிவகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘தேவா’ திரைப்படம், வெளியூருக்கு படிக்கப் போகும் போது கதாநாயகன் கதாநாயகி காதலித்து விட அவர்கள் எப்படி இருவரும் குடும்பத்தாரை சமாளித்து திருமணம் செய்து கொள்கின்றனர் என்பதை கதையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு மட்டுமே பூர்த்தி செய்தது.

Trending News