வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினிக்கு போட்டியா உச்சம் தொடும் விஜய்யின் சம்பளம்.. அரசியல் என்ட்ரிக்கு முன் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்

Actor Vijay hike their salary for his upcoming movie: தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு பின் இன்று வரை அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக படங்களை பிடிப்பதிலும் இயக்குனர்களை ஃபிக்ஸ் பண்ணுவதிலும் இலை மறை காயாக செயல்பட்டு வருகின்றனர். அஜித்தை விட ஒரு படி மேலே சென்று சம்பள விஷயத்திலும் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதிலும் விஜய் அதிக கவனத்துடன் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

விறுவிறுப்பாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக G.O.A.T. விஜய், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஜெயராம், பிரசாந்த், மோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் விஜய் 68 பட குழுவினர் கிரிக்கெட் விளையாடுவது போல் உள்ள வீடியோ வைரல் ஆகியது. படத்தை மட்டுமே சீரியஸாக உற்று நோக்கும் விஜய்க்கு,வெங்கட் பிரபுவின் ஜாலியான விளையாட்டு சில சமயங்களில் பிடிப்பதில்லை. விஜய்யின் மூடுக்கு தகுந்த மாதிரி பார்த்து பார்த்து  இயக்கி வருகிறாராம் வெங்கட் பிரபு.

Also read: ஏழு ஜென்மம் எடுத்தாலும் விஜய் கூட இனி சேரவே முடியாத 5 இயக்குனர்கள்.. போஸ்டரே வெளியிட்டு பல்பு வாங்கிய கௌதம் மேனன்

லியோ படபிடிப்பின் போது விஜய் 68 காண அறிவிப்பை அறிவித்து ரசிகர்களை இடைவேளை இன்றி கொண்டாட செய்தார் விஜய் அதேபோல் தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்க, படமா? அரசியலா? என இருதலைக்கொல்லி எறும்பாய் இருந்தார் விஜய்.

ஒரு வழியாக தேர்தல் 2026 என அறிவித்ததால் அதற்குள் அதிக சம்பளத்துடன் படம் பண்ணி விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். தற்போது விஜய் 68 காக  தளபதி வாங்கும் சம்பளமோ 200 கோடி. சமீப காலமாக தமிழ் சினிமாவில் யார் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற போட்டோ போட்டி சத்தமின்றி நிலவி வருகிறது.

தலைவர் 171 காக ரஜினி அவர்கள் 250 கோடி வரை சம்பளம் பேசி இருப்பதாக தகவல். அதனை ஈடு செய்யும் வண்ணமாக தனது முந்தைய படங்களை விட  மற்றும் பிற நடிகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்க வேண்டும் என்ற கருத்தில் கவனமாக இருக்கும் விஜய் அவர்கள் ஆர் ஆர் ஆர் தயாரித்த DVV  என்டர்டைன் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளாராம்.

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா மூவியாக உருவாக உள்ள இப்படத்திற்கு விஜய்யின் கால் சீட்டுக்காக DVV என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் 250 கோடி வரை சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல். இப்போதைக்கு சினிமாவை மெய்னாக வைத்துவிட்டு அரசியலிலும் ஒரு கண் வைத்து அவ்வப்போது ரகசிய திட்டங்கள் அரங்கேற்றி வருகிறார் விஜய். காலம் மாறினால் கண்ணோட்டமும் மாறலாம்

Also read: விஜய்யிடம் செம திட்டு வாங்கிய வெங்கட் பிரபு.. ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனே!

Trending News