விஜய்யிடம் செம திட்டு வாங்கிய வெங்கட் பிரபு.. ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனே!

Actor Vijay is angry with director Venkat Prabhu: லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தன்னுடைய 68வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வெங்கட் பிரபுவுக்கும் விஜய்க்கும் செட் ஆகாதுன்னு பல பேர் சொன்னார்கள். அதை மீறி தளபதி 68 படத்தை துவங்கி படப்பிடிப்பு நன்றாக தான் போனது.

அந்த படத்திற்கு ‘தி கோட்’ என்ற டைட்டிலையும் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். ஆனால் இப்போது விஜய்க்கு வெங்கட் பிரபுவின் மீது கோபம் வந்துள்ளதாம். வெங்கட் பிரபு தன்னோட இஷ்டத்திற்கு படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்துகிறார். இதனால் நேரம் தான் வீணாகிறது என்று விஜய் செம கடுப்பில் இருக்கிறார்.

பொதுவாக விஜய் ஒரு படத்தை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க பார்ப்பார். ஆனால் விஜய் ஸ்பீடுக்கு வெங்கட் பிரபு வராமல், அவருக்கு தோன்றுவதை தான் செய்கிறார். இதனால் வெங்கட் பிரபுவிடம் விஜய், ‘உங்க இஷ்டத்துக்கு ஷூட் பண்ணி டைம் வேஸ்ட் பண்றீங்க. நான் இது மாதிரி எல்லாம் இடைவெளி விட்டு நடிக்க மாட்டேன்.

Also Read: ஏழு ஜென்மம் எடுத்தாலும் விஜய் கூட இனி சேரவே முடியாத 5 இயக்குனர்கள்.. போஸ்டரே வெளியிட்டு பல்பு வாங்கிய கௌதம் மேனன்

வெங்கட் பிரபு மீது கோபத்தில் இருக்கும் விஜய்

நான் சொன்ன தேதிக்கு படத்தை முடிக்கவில்லை என்றால், என்னுடைய அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு கிளம்பு விடுவேன்’ என்று சொல்லிவிட்டாராம். விஜய் இவ்வளவு கோபமாக பேசுவதற்கும் காரணம் இருக்கிறது. வெங்கட் பிரபுவின் டீம் ரொம்பவே ஜாலி பண்ணக்கூடிய டீம்.,இது விஜய்க்கு செட்டாகல. வெங்கட் பிரபு தன்னுடைய படங்களில் பெரும்பாலும் நண்பர்களை தான் அதிகம் பயன்படுத்துவார்.

படம் எடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த படம் முழுக்க அவர்கள் எல்லோரும் செம்மையா என்ஜாய் பண்ணுவார்கள். அப்படித்தான் ‘தி கோட்’ படப்பிடிப்பும் நடக்கிறது. ஆனால் விஜய்க்கு தான் அது சுத்தமா பிடிக்கவில்லை. ‘ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டோமே’ என்று இந்த டீமில் இணைந்தது குறித்து விஜய் இப்போது தான் கவலைப்படுகிறார்.

Also Read: விஜய் கூட கொஞ்சல்ஸ் மட்டும் தான்.. விரைவில் டும் டும் டும்-க்கு ரெடியான க்யூட் ஜோடி