Actor Vijay is buying news channel for politics: அண்ணாவின் மறைவுக்கு பின் எம்ஜிஆர் எப்படி புகழின் உச்சத்தில் இருந்து அரசியலில் நுழைந்தாரோ, அதேபோல் தமிழ் சினிமாவில் புகழிலும் மார்க்கெட்டிலும் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சமீபத்தின் தனது அரசியல் வருகையை அறிவித்து அமர்க்கள படுத்தியுள்ளார்.
திடீரென கட்சி ஆரம்பித்து விழுந்தடிக்கும் கதை போல் இல்லாமல் பல வருடமாக பற்பல செயல்கள் செய்து பலமான அடித்தளத்தை போட்டு உள்ளார் விஜய். இளைய தளபதியின் மக்கள் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு முன்னணி கட்சிகள் சில விஜய் உடன் கூட்டணி வைக்க ஆர்வத்துடன் இருக்கின்றன.
கூட்டணி பற்றி தெளிவு படுத்தாத விஜய் தற்போது நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலுக்குப் பின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி தனது கொள்கைகள் பற்றி மக்களிடையே தீவிரமாக விவாதிக்க உள்ளாராம். சினிமாவை கொஞ்ச காலத்திற்கு ஓரம் கட்டி முழு நேர அரசியல்வாதியாக மக்களிடம் நெருங்க உள்ளார் விஜய்.
Also read: விஜய்யை வளர்த்துவிட்ட சூப்பர் குட் ஃபிலிம்ஸ் 5 படங்கள்.. இளைய தளபதியை தூக்கி நிறுத்திய பூவே உனக்காக
விஜய்யின் அரசியல் வருகை, பலருக்கும் பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொடர்ந்து தனது திட்டங்களை ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறார். அதாவது 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வண்ணம் தனது கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மக்கள் அறியும் வண்ணம், மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள உள்ளார்.
அதற்கு அச்சாரமாக நியூஸ் சேனல் ஒன்றை துவக்க உள்ளதாக கூறியுள்ளார். புதிதாகத் தொடங்கினால் அனுமதி வாங்க சிரமம் என்பதால் ஏற்கனவே இருக்கும் வசந்த், மெகா மற்றும் கேப்டன் போன்ற சேனல்கள் வாங்குவது பற்றி பரிசீலிக்கபட்டு வருகிறது. விரைவில் தளபதி டிவிக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இது பற்றி கூறிய விஜய் மக்கள் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப அணி ஏற்கனவே யூடியூப் சேனல் மூலம் மக்கள் மன்றத்தின் செயல்கள் பதிவிடப்படுகிறது என்றும் தற்போதைக்கு நியூஸ் சேனல் பற்றிய தகவல் தவறானது என்றும் கூறியுள்ளனர். எதிர்க்கட்சியை விமர்சிப்பதற்கும் தங்கள் கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்கும் சேனல் இல்லாமல் எப்படி? இதை புரிந்து கொள்ள வேண்டாமா தமிழக வெற்றி கழகம்.
Also read: நரிதந்திரத்தை அரங்கேற்றும் புஸ்ஸி ஆனந்த்.. இளையதளபதியை கண்அசைவில் ஆட்டி வைக்கும் கொடூரம்!