திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அன்பு தம்பிக்காக எல்லாத்தையும் மறந்த விஜய்.. காற்றில் பறக்கும் கொள்கைகள்

தளபதி விஜய் இப்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் அடுத்தடுத்து படங்கள் என்னவாக இருக்கும் என்பதை கோலிவுட் வட்டாரம் ஓரளவுக்கு கணித்து விட்டது என்றே சொல்லலாம். தளபதி 67 இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் சஞ்சய் தத், பிரித்விராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

தளபதி விஜய் பொதுவாகவே ரொம்ப பிரைவேட் பெர்சன். அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்களோ இல்லை அவருடைய பிரைவசி போட்டோக்களோ எதுவுமே வெளிவராது. மேலும் அவரோ, அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளோ எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் அவ்வளவாக ஆக்டிவாக இருப்பவர்களோ இல்லை, ப்ரைவசியை ஷேர் செய்பவர்களோ இல்லை.

Also Read: மாஸ்டர் படத்துக்கும் வலிமைக்கும் உள்ள இந்த ஒற்றுமை.. தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா?

இந்நிலையில் அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய்யின் புகைப்படங்களை அட்லீ சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். விஜய் பிரைவேட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் உடனே வெளியில் வருகிறது இதுவே முதல் முறை. இயக்குனர் அட்லீக்காக விஜய் தன்னுடைய பழைய கொள்கைகளை கை விட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

நடிகர் விஜய்க்கும், இயக்குனர் அட்லீக்கும் ஒரு நல்ல நட்பு உள்ளது. தளபதி விஜய் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடித்த நண்பன் படத்தில் இயக்குனர் அட்லீ உதவி இயக்குனராக இருந்தார். பின்பு AR முருகதாஸ் தயாரிப்பில் அட்லீ, ஆர்யா,நயன்தாரா, ஜெய், நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்னும் படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

Also Read: ரஜினியை வைத்து பஞ்சாயத்து பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர்.. அதுக்கு விஜய் கொடுத்த ரியாக்சன்

இந்த படம் பிடித்து போன தளபதி விஜய் அட்லீக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். நடிகர் விஜய், சமந்தா, இயக்குனர் மகேந்திரன், ராதிகா நடித்த தெறி படத்தை அட்லீ இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் மெர்சல் திரைப்படத்தில் நடித்தார். நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அரசியல் தரப்புகளில் இருந்து பல எதிர்ப்புகள் வந்தாலும் மெர்சல் படம் வெற்றி கொடி நாட்டியது.

விஜய் -அட்லீயின் ஹாட்ரிக் கூட்டணியாக அமைந்தது தான் பிகில் திரைப்படம் ஆகும். இப்போது அட்லீ, ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

Also Read: தன் பெயரிலேயே விஜய் நடித்த 7 திரைப்படங்கள்.. அதுல பாதி படம் அவரை சோதித்துவிட்டது

Trending News