ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜயகாந்த் வாழ்க்கை கொடுத்த 6 வில்லன்கள்.. மீசைக்கு பேர் போன ராஜேந்திரன்

Actor Vijayakanth gave chance to 5 Actors for villan characters: கேப்டன் என்று மரியாதையோடு அழைக்கப்பட்டு பாடிகாட்ஸ் இல்லாமல் தன் அன்பு ரசிகர்களோடு ஒன்றர கலந்து வலம் வந்த ஆக்க்ஷன் ஹீரோ விஜயகாந்த் ஆக மட்டும் தான் இருக்க முடியும். ஒன்று இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த உடனையே தலைக்கனத்துடன் ஆடுபவர்கள் மத்தியில் பழசை என்றும் மறக்காமல் தன்னைப் போல் உள்ள கலைஞர்களை கை தூக்கி விட்ட இந்த காவிய  தலைவன் வாய்ப்பு கொடுத்த வில்லன்களை காணலாம்.

மன்சூர் அலிகான்: தனக்கு வாழ்வு கொடுத்தவர் என்று விஜயகாந்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டவர் மன்சூர் அலிகான். காரணம் நடன கலைஞராகவும் ஸ்டண்ட் கலைஞனாகவும் இருந்த மன்சூர் அலிகானை கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தி அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார் விஜயகாந்த்.

பொன்னம்பலம்: விஜயகாந்த்  சம்பளம் வாங்காமல் கௌரவ வேடத்தில் தான் நடித்த செந்தூரப் பாண்டியில்  வில்லனாக பொன்னம்பலத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். தனது குடும்ப சூழ்நிலையை சொல்லி பொன்னம்பலம் புலம்பவே, இயக்குனர் எஸ்ஏசி இடம்  வில்லனாக இவரை பரிந்துரைத்து அவர் எதிர்பார்க்காத  வகையில் சம்பளம் கொடுத்து அவரை முன்னேற வைத்தார் விஜயகாந்த்.

Also Read: ரஜினிக்கு தம்பியாக நடித்து வில்லனாக மாறிய விஜயகாந்த்..நண்பனின் கட்டளைக்காக சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த கேப்டன்

சோனு சூட்: கள்ளழகர் படத்தில் வில்லனாக நடித்த போது சோனு  சூட்டுவின் உடல் எடை அதிகரிப்பதற்காக ஒரு மாதம் தேவைப்படவே வெயிட் பண்ணுகிறேன் என்று சொல்லி  படப்பிடிப்பை தள்ளி வைத்தார். இவர் நினைத்திருந்தால் அடுத்த நடிகரை மாற்றி விட்டு போய்க்கொண்டே இருக்கலாம் ஆனால் வளர்ந்து வரும் நடிகனுக்கு வாய்ப்பு கொடுத்து அவன் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தார் விஜயகாந்த். இவர் இல்லையென்றால் நான் இந்த இடத்தில் இல்லை என்று உருக்கத்துடன் கூறிஉள்ளார்.

சலீம் கவுஸ்: வெற்றி விழாவிற்கு பின் பாராமுகமாக இருந்த சலீம் கவுஸ்சை விஜயகாந்த சின்ன கவுண்டர் படத்தில் சர்க்கரை கவுண்டர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சைலன்ட் கில்லர் ஆக தமிழ் சினிமாவில் வலம் வந்த சலீம் கவுஸ் ஐ யாரும் மறந்திருக்க முடியாது. சின்னகவுண்டருக்கு பின் திருடா திருடா, செந்தமிழ் பாட்டு போன்ற படங்களில் நடித்து முன்னணி வில்லனாக உருவெடுத்தார் சலீம் கவுஸ்.

ராஜேந்திரன்: விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் பரபரப்பாக செயல்பட்டு வருபவர் மீசை ராஜேந்திரன். இவர் விஜயகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். விஜயகாந்த் இவரின் மூலமாக பல பேருக்கு உதவி செய்து உள்ளார். இதனை நினைவு கூறிய ராஜேந்திரன் நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். எல்லாமாகவும் இருந்த கேப்டன் தான் எங்களுக்கு முதலும் கடைசியும் என்று  கண்ணீர் பெருக்குடன் உணர்ச்சிவசப்பட்டார் ராஜேந்திரன்

ஆனந்தராஜ்: திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை தந்ததில் விஜயகாந்த்திற்கு அளப்பரிய பங்கு உள்ளது எனலாம். வாய்ப்பு தேடி வரும் கலைஞனாக ஆனந்தராஜ் இருந்தபோது அவருக்கு பக்க பலமாக தனது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து அவரை ஏற்றி விட்ட பெருமை விஜயகாந்த்தையே சாரும்.

Also Read: விஜயகாந்த் வளர்த்து விட்ட 6 நடிகர்கள்..குடை பிடிக்க வந்து கொடூரமாக தாக்கிய மாமன்னன்!

Trending News