Actor Vijayakanth helps to boostup 6 tamil heros: தமிழ் சினிமாவில் கடின உழைப்பில், தான் உயர்ந்ததோடு தன்னோடு இருப்பவர்களையும் உயரச் செய்தவர் விஜயகாந்த். கொடுத்து கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் ஆன இவர் முன்னணி நடிகர்கள் பல பேரை சினிமாவில் அறிமுகப்படுத்தும் போது பக்கபலமாக இருந்ததோடு வெற்றிக்கும் தோள் கொடுத்து உள்ளார் இந்த தோழர்.
மன்சூர் அலிகான்: புரட்சி கலைஞர் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரனில் வில்லன் வேடத்திற்காக மன்சூர் அலிகானுக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த். 100வது படம் தியேட்டரில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. இதன்மூலம் பக்கா வில்லனாக வலம் வந்தார் மன்சூர் அலிகான். இறுதி வரை இன்னமும் நன்றி மறக்காத மன்சூர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போது திரும்பி வாங்க அண்ணே என்று கதறியும் உள்ளார்.
விஜய்: தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு முதல் படமான நாளைய தீர்ப்பு ரீச் ஆகாமல் போகவே செந்தூரப் பாண்டியில் முக்கிய வேடத்தில் வந்து விஜய்யை கை தூக்கி விட்டிருந்தார் விஜயகாந்த். தனது நண்பர் எஸ் எஸ் சி வேண்டுகோளுக்கு இணங்க கௌரவ தோற்றத்தில் இப்படத்தில் ஊதியம் வாங்காமலேயே உழைப்பை கொடுத்திருந்தார் விஜயகாந்த்.
Also read: சரிந்தது இமயம்.. விஜயகாந்த் காலமானார், மீளா துயரில் திரையுலகம்
வடிவேல்: கவுண்டமணி செந்தில் என கொடி கட்டி பறந்த அந்த காலத்தில் வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்ட வடிவேலை கைகாட்டி குடை பிடிக்கும் வாய்ப்பு கொடுத்து சினிமாவில் குடிபுக வைத்தவர். செய்நன்றி மறந்த வடிவேலு கர்வம் தலைக்கேறிய நிலையில் ஏற்றி விட்டவரையே எட்டி உதைத்தார். 2011 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த்விற்கு எதிராக பிரச்சாரம் செய்து மண்ணை கவ்வியது மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடிக்க முடியாமல் பத்து வருடம் தடை வாங்கினார் வடிவேலு.
தியாகு: விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தியாகு ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் கஷ்டப்பட்டபோது தான் நடிக்கும் படங்களில் குணசித்திர நடிகராகவும் வில்லனாகவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார் விஜயகாந்த். சினிமாவில் எப்படி இருந்தாரோ அது போலவே நிஜ வாழ்க்கையிலும் விஜயகாந்த் தைரியத்துடன் தப்பு செய்தவரை தண்டிக்கவும் திருத்தவும் செய்தார் என்றார் தியாகு.
செந்தில்: ஆரம்ப காலங்களில் நகைச்சுவையில் கொஞ்சம் பின் தங்கி இருந்த செந்திலுக்கு தனது படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் விஜயகாந்த். அம்மன் கோவில் கிழக்காலே. வைதேகி காத்திருந்தாள். நானே ராஜா நானே மந்திரி போன்ற படங்களில் செந்தில் மற்றும் விஜய்காந்த் கூட்டணி நகைச்சுவையில் ரசிகர்களை வயிறு வலிக்க வைத்தது.
கரண்: விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கண்ணுபட போகுதய்யா நடிகர் கரணுக்கு திருப்புமுனையை தந்தது. இப்படத்தில் விஜயகாந்த் தம்பியாக நடித்து இருந்த கரணுக்கு நடிப்பை தாண்டி உண்மையான பாசத்துடனும் தோழமையுடனும் சினிமாவின் பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார் விஜயகாந்த்.
Also read: இலை போட்டு வயிறார உணவிட்ட ஏழைகளின் நாயகன்.. விஜயகாந்த் ஒரு சகாப்தம்