ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரேமலதா போட்ட கண்டிஷனை காற்றில் பறக்க விட்ட விஜயகாந்த்! செகண்ட் இன்னிங்சில் விஜயகாந்த் பட்டைய கிளப்பிய 5 படங்கள்

Actor vijayakanth hits 5 films and starts his second innings cameback in tamilcinema: தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களை பண்ணிக் கொண்டிருந்த விஜயகாந்த்திற்கு 1996 முதல் 2000 வரை நிறையபடங்கள் ஃப்ளாப் ஆகின. அலெக்சாண்டர், வீரவளைஞ்ச மண்ணு, தர்மா போன்ற படங்களுக்கு பின் விஜயகாந்த் கேரியர் க்ளோஸ் என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போதான் விஜயகாந்த் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார் மீண்டும் துளிர்த்து எழ அவரின் சில படங்கள் அவரை கை தூக்கி விட்டன.

வாஞ்சிநாதன்: மலையாளத்து வரவான ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் வாஞ்சிநாதன். இயக்குனருக்காக இப்படத்தை சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்று இந்த படத்தில் வாழ்ந்து காட்டினார் விஜயகாந்த்.

Also read: ரத்தமும் சதையமா இருந்துட்டு இந்த அஞ்சு பேரு சாவுக்கு கூட போகாத வடிவேலு.. விஜயகாந்த் ஆல் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி

வல்லரசு: அறிமுக இயக்குனர் மகாராஜன் இயக்கத்தில் அனல் தெறிக்கும் வசனங்களோடு வெளிவந்த வல்லரசு தொடர் தோல்விகளில் துவண்டு கொண்டிருந்த விஜயகாந்த்திற்கு சிறப்பான திருப்பத்தை கொடுத்தது. ஜாதியைப் போராட்டம் கார்கிலுக்குப் பின் இந்தியாவில் தீவிரவாதிகளின் ஊடுருவல் என பலவற்றை பந்தாடியிருந்தார் வல்லரசு. படத்தின் விநியோகஸ்தர்கள் சிலர் இப்படத்தின் வெற்றியின் பொருட்டு இரண்டு வீடுகளை வாங்கும் அளவுக்கு வசூலை வாரி குவித்தார்கள்.

நரசிம்மா: காஷ்மீர் பிரிவினைவாதத்திற்காக தீவிரவாதிகள் தமிழ்நாட்டின் கட்டிடங்களை தகர்ப்பதற்காகவும் முக்கிய தலைவர்களை அழிக்க திட்டம் போடுகிறார்கள். இந்த திட்டத்தை முறியடிப்பது நரசிம்மாவின் வேலையாக இருந்தது.  இதை செவ்வனே செய்து அசத்தியிருந்தார் விஜயகாந்த்.

தவசி: உதயசங்கர் இயக்கத்தில் விஜயகாந்த் தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடித்த படம் தவசி. தப்பு செய்வது யாரானாலும் தண்டனை உண்டு என்பதை அழுத்தமான திரைக்கதையுடன் தெறிக்க விடும் வசனங்களுடன் பூர்த்தி செய்திருந்தார் விஜயகாந்த்.

ரமணா: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ரமணா விஜயகாந்த்தை ஒரு புதுவித பரிமாண தோற்றத்தில் ரசிகர்களிடையே வெளிப்படுத்தியது எனலாம். ஊழலுக்கு எதிரான வன்முறையை சத்தம் இல்லாமல் அரங்கேற்றி, களை எடுத்திருப்பார் விஜயகாந்த். அதிலும் ஹாஸ்பிடல் சீன் “ உங்களிடமும் சொல்லக்கூடாத ஒன்னு இருக்கு “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை” வசனம் சாமானியனையும் சபாஷ் போட செய்தது.

இந்த படத்தில் விஜயகாந்த் இறப்பது போல் உள்ள சீனை மாத்தணும் என்று பிரேமலதா  போட்ட கண்டிஷனை தூள் தூளாக்கி இயக்குனர் விருப்பப்படியே நடித்துக் கொடுத்தாராம். படமோ பிளாக் பஸ்டர் ஹிட்!

Also read: விஜயகாந்த் அரசியலுக்கு தூபம் போட்ட இயக்குனர்.. இவர் ஏத்தி விடலனா மனுஷன் உசுரோட இருந்திருப்பாரு

Trending News