வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜயகாந்திற்கு செய்யப்பட்ட சதி.. மண்டபத்தை இடிக்காமலேயே பாலத்தைக் கட்டிருக்கலாம், வைரல் புகைப்படம்

Actor Vijayakanth marriage hall demolished history: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும், தேமுதிக கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான விஜயகாந்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை கலைஞர் ஆட்சியில் பாலம் கட்டுவதாக கூறி அவரின் மண்டபம் அமைந்திருந்த ஒரு ஏக்கர் நிலத்தை அரசு அபகரித்துக் கொண்டது. பாலம் கட்டியது போக மீதமுள்ள மூணு கிரவுண்ட் இடத்தை மட்டுமே கொடுத்து வெறுப்பேத்தி இருந்தார்கள்.

அதுவே இப்போது உள்ள திருமண மண்டபமும் தேமுதிக தலைமை அலுவலகம் ஆகும். தேமுதிகவின் அலுவலகத்தை திறந்து வைத்த போது இச்செயலை வன்மையாக கண்டித்த விஜயகாந்த் அவர்கள், “இது திட்டமிடப்பட்ட அரசியல் சதி” என்றும் அதில் தான் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

2006 இல் இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்தின் தேமுதிக உருவெடுத்தது.  இதை முற்றிலும் எதிர்பாராத அரசியல் பிரமுகர்கள் அவரை வீழ்த்தும் பொருட்டு உளரீதியாக அவரை காயப்படுத்தக் காத்து கொண்டிருந்தனர். அதன் முக்கிய சம்பவம்  தான் பாலம் கட்டுகிறேன் என்ற பெயரில் மண்டபத்தை இடித்தது.

Also read: தாய் முதல் தாரம் வரை.. ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் வாழ்வில் நிகழ்ந்த கோஇன்சிடன்ஸ்

பாலத்தை கட்டும்போது படத்தில் உள்ளது போன்று உண்மையாகவே மண்டபத்தை இடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத போதும் விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சியை சீர்குலைக்கும் எண்ணத்துடன் பாலத்தை சற்று நீட்டித்து வேண்டுமென்றே இடித்ததாக செய்திகள் பரவின. சில இடங்கள் மனதிற்கு பிடித்தமானவையாகவும் உயிரோட்டமான நினைவுகளை சுமந்தவையாகவும் இருக்கும். சொந்த உழைப்பில் கட்டப்பட்டது உயிருக்கும் மேலானதாக இருப்பதில் தவறில்லையே.

உன் காலண்டரில் குறித்து வைத்துக்கொள் என்று எழுந்த அண்ணாமலையை போல் அவரது அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமாக அமைந்தது இந்த சம்பவமே ஆகும். அதற்குப் பின் மாற்று சக்தியாக உருவெடுத்த விஜயகாந்த் தேர்தலில் அபாரமாக வெற்றி பெற்று குறைந்த காலத்திலேயே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார்.

இறுதிவரை தன் மண்டபத்தை இடிப்பதற்கு காரணமான பிரதான கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பவே இல்லை. எந்த இடத்திற்காக போராடினாரோ அதே இடத்தில் இன்று  விதைக்கப்பட்டு உள்ளார் விஜயகாந்த். தன்னலம் கருதாது உழைத்த  தலைவனை இழந்தது தமிழகமே ஆகும்.

Also read: விஜயகாந்த் குடும்பம் வைத்த கோரிக்கை.. ஒரே நாளில் செயல்படுத்தி காட்டிய முதல்வர் ஸ்டாலின்

Trending News