செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

அடுத்த படத்திற்காக அதிரடி காட்டும் விஜயகாந்த்.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்

தமிழ் சினிமாவில் சுமார் 156 படங்களுக்கு மேல் நடித்து 90களில் ரசிகர்களின் மத்தியில் கேப்டன் என்ற அடை மொழியுடன் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு இவர் 2011 முதல் 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கின்ற தனிக் கட்சியை துவங்கி அதன் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றார்.

இவ்வாறு சினிமாவிலும் அரசியலிலும் ரவுண்ட் கட்டிக்கொண்டிருந்த நடிகர் விஜயகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் இருக்கிறார். ஆகையால் கட்சி வேலைகளையும் அவருடைய மனைவி பிரேமலதா அவர்களே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இருக்க பொது நிகழ்ச்சிகளிலும் மேடைகளிலும் விஜயகாந்தின் பேச்சைக் கேட்கவே முடியவில்லை என தொண்டர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது அவருடைய சமீபத்திய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதில் விஜயகாந்த் துளி கூட அடையாளம் தெரியாமல் ஒடுங்கிய முகத்துடன் மெலிந்து போயிருக்கிறார். இதைப் பார்த்த பலருக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்திருக்கிறது. விஜய் ஆண்டனி இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கப்போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது அதற்கான கெட்டப்பாக இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவருடன் இணைந்து சரத்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijayakanth-2
vijayakanth-2

அத்துடன் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய சமீபத்திய புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் அவருடைய தொண்டர்களாளும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுக்கிறது.

actor-vijayakanth-new-look-cinemapettai
actor-vijayakanth-new-look-cinemapettai

Trending News