Actor Vijay’s father SA Chandrasekhar criticized his film: இன்றைய சினிமா எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பதைபதைப்பு சினிமா ஆர்வலர்களுக்கு மேலோங்கி உள்ளது மக்கள் பெரும்பாலானோர் ஆக்சன் படங்களை விரும்பி பார்க்கின்றனர். பிரம்மாண்ட பட்ஜெட், முன்னணி ஹீரோ, கூடுதலான ஆக்சன் இவையே இன்றைய சினிமாவில் வசூலில் சாதனை படைக்கும் தந்திரமாகும்.
பீல் குட் மூவியாக உணர வைக்கும் படங்கள் ஒரு சிலவே வெளி வந்தாலும் வசூலில் அவை சாதனை செய்வதில்லை. வணிக ரீதியாக வெற்றி பெற நினைக்கும் சினிமா துறையினர் தரமான கதைகளை நம்பி படங்களை எடுக்க தயங்குவதற்கு முக்கிய காரணம் வசூலை ஈட்ட முடியாது என்பதே.
தமிழ் சினிமாவின் இயக்குனரும் முன்னணி நடிகரான விஜய்யின் தந்தையும் ஆன எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விழா ஒன்றில் தரமான கதைகளுடன் வரும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததை பற்றியும் வன்முறை கலந்த ஆக்சன் படங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து உள்ளார். அவர் தன் மகன் நடிப்பில் வெளியான ஒரு படத்தை சுட்டிக்காட்டி அந்தப் படம் யார் நடிச்சாலும் சில்வர் ஜூபிலி தான்! என்று கூறியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Also read: பத்திரத்தோடு விஜய் போட்ட கட்டளை.! ஜெயலலிதா பாணியில் சட்ட விரோதமாய் செய்த வேலை
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சவுத்ரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் எழிலின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த கவித்துவமான காதல் காவியம் துள்ளாத மனமும் துள்ளும். நாயகன் மற்றும் நாயகிக்கு இடையிலான காதலை அழகாக வெளிப்படுத்தி பீல் குட் மூவியாக மக்களை உணர வைத்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும்.
இப்படத்திற்கான கதையை முதலில் ஒரு நடிகருக்கு சொல்லி மறுத்து பின் நடிகர் விக்னேஷ்க்கு சொல்லி அவரும் மறுத்து இறுதியாக விஜய்யை ஃபிக்ஸ் பண்ணினர். சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய எஸ் எஸ் சி, துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் திரைக்கதைகாகவே பல நாட்கள் ஓடியது என்றும் விஜய் நடிக்காமல் அந்தப் படம் யார் நடிச்சாலும் சில்வர் ஜூபிலி தான். என்று கூறியுள்ளார்.
தமிழில் பெற்ற வெற்றியின் காரணமாக பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது இந்த படம். விஜய்க்கு கேரளா மக்கள் ஆடியன்ஸ் அதிகமாக காரணம் இந்த திரைப்படம் என்று கூறினார் எஸ் ஏ சி. இன்றைய காலத்தில் இயக்குனர்கள் ஆக்சன் படங்களையே மக்களிடம் திணிக்கின்றனர் என்றும் தரமான கதைகளுக்கு முக்கியத்துவம் மறுக்கும் நிலையை, பின் விளைவுகளை ஆராயாமல் தைரியமாக எடுத்து வைத்தார் எஸ் ஏ சி.