நடிகர் விஜய் இன்றைய கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவருடைய ஒவ்வொரு படத்தையும் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய மிகப் பெரிய போராட்டத்தையே சந்தித்து வருகிறார். இப்போது கூட வாரிசு படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய பல சிக்கல்களும், தடைகளையும் சந்தித்து இருக்கிறார். அவருக்கு இந்த சிக்கல்களும், தடைகளும் பல வருடங்களாகவே இருந்து வருகின்றன.
புதிய கீதை: இயக்குனர் கே. பி. சகன் இயக்கத்தில் விஜய் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் புதிய கீதை. இந்த படத்திற்கு முதலில் கீதை என்று பெயரிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு கீதை என்ற பெயர் வைக்க கூடாது என இந்து அமைப்பினர் பிரச்சனை கிளப்பியதால்
புதிய கீதை என மாற்றப்பட்டது.
காவலன் : நடிகர் விஜய் மற்றும் அசின் நடித்து இயக்குனர் சித்திக் இயக்கிய திரைப்படம் காவலன். விஜய்யின் 50வது படமான சுறா படத்தின் நஷ்டத்தை ஈடு கட்டிய பிறகு தான் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் ரிலீஸ் செய்ய அனுமதித்து.
துப்பாக்கி: ஏற்கனவே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பு பதிவு செய்யப்பட்டு இருந்ததால், துப்பாக்கி படத்தின் பெயரை மாற்றக் கோரி அந்த படக் குழுவினர் பிரச்சனையை கிளப்பினார்கள்.
Also Read: விஜய் வாரிசுக்கு அதிர்ச்சி நோட்டீஸ்.. திருட்டுத்தனமாக படக்குழு செய்த வேலையால் தலைகுனித்த தளபதி
தலைவா: தலைவா படம் திரையிடப்படும் தியேட்டர்களில் வெடிகுண்டு வீசப்படும் என்ற மிரட்டல் வந்ததால் தமிழக அரசு படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது. ‘டைம் டூ லீட்’ என்ற வசனத்தை நீக்கிய பின் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
கத்தி: லைகா பட நிறுவனத்தின் உரிமையாளர் முன்னாள் இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு உறவினர் என்பதால் அந்த நிறுவனம் தயாரித்த கத்தி திரைப்படம் ரிலீஸ் ஆக கூடாது என தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தினர்.
புலி: இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி நடித்த திரைப்படம் புலி. இந்த படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
தெறி: அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தெறி. ஆனால் இந்த படத்தை மினிமம் கேரண்டி முறையில் விற்பனை செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையில் பிரச்சனை வெடித்தது.
மெர்சல்: இந்த படத்திற்கு பாஜக அணியினர் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தனர். படம் வெளியாவதற்கு 24 மணி நேரம் முன்பு வரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.
சர்க்கார்: சர்க்கார் படத்தின் கதை தன்னுடைய கதை, அதை திருடிவிட்டார்கள் என வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
பிகில்: பிகில் பட போஸ்டரில் கறிக்கடையின் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது நடிகர் விஜய் கால் வைத்திருப்பது போல் இருந்ததால் வியாபாரிகள் சங்கத்தினர் பயங்கர கண்டனம் தெரிவித்தனர்.
மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த போது வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். இதற்காக விஜய் நெய்வேலியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
பீஸ்ட்: பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், KGF2 ரிலீஸ் காரணமாக ஏப்ரல் 13 ஆம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டது.