சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விக்ரமிற்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்.. இப்பவரை வெறுத்து ஒதுக்கும் ஒரே படம்

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்பில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரே நடிகர் என்றால் அவர் விக்ரம் மட்டும்தான். ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அதை அப்படியே உள்வாங்கி அந்த கேரக்டராகவே மாறி நடிப்பதுதான் இவருடைய வெற்றிக்கு காரணம்.

இப்படி இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் அந்த கதையும், கதாபாத்திரமும் தான். ஆனால் இப்படி கதையை தேர்ந்தெடுப்பதில் அவர் சொதப்பிய காலமும் அப்போது உண்டு.

எப்படி என்றால் விக்ரம் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதில் விக்ரமுடன் இணைந்து சரத்குமார், தேவயானி, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் அந்த படத்தை தேவயானியின் கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் இயக்கி இருந்தார்.

நீ வருவாய் என திரைப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. சேது திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த விக்ரமுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் இந்த படம் தன்னுடைய திரைப்பயணத்தில் மிகவும் மோசமான திரைப்படம் என்று அப்போது அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனால் கடுப்பான இயக்குனர் ராஜகுமாரன் அந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தும் விக்ரமுக்கு நடிக்கவே தெரியவில்லை என்று ஒரு புது குண்டைத் தூக்கிப் போட்டார்.

அதுபோக சேது படம் எல்லாம் ஒரு படமா என்று விக்ரமை கண்ட படி பேசினார். உண்மையில் அந்த படத்தில் விக்ரமுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்திருக்கிறது. அதாவது அதில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதனால் விக்ரமுக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கிறது. அதுபோக சம்பள விஷயத்திலும் சில முரண்பாடுகள் இருந்துள்ளது.

இயக்குனர் அதைப் பற்றி குறிப்பிடாமல் விக்ரமுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதை அறிந்த விக்ரமின் ரசிகர்கள் படத்தில் நடிக்க வைத்து அவரின் பெயரை கெடுத்தது மட்டுமல்லாமல் அவரை குற்றம் வேறு சொல்கிறீர்களா என்று அவருக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர்

Trending News