சீயான் 63க்கு நடந்த நீயா நானா போட்டி.. மாரி செல்வராஜை ஓரங்கட்டி விக்ரம் லாக் செய்த த்ரில்லர் இயக்குனர்

Vikram: விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் உருவான தங்கலான் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெறித்தனமாக வெளிவந்த நிலையில் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதேபோல் விக்ரம் இப்போது வீர தீர சூரன் படத்தில் பிஸியாக இருக்கிறார். சித்தா பட இயக்குனரின் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளிவர இருக்கிறது.

இதுவே புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த நிலையில் படத்தில் விக்ரமின் கேரக்டரும் சர்ப்ரைஸ் தான். இதற்கு அடுத்ததாக அவரின் 63 வது படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது.

விக்ரம் லாக் செய்த இயக்குனர்

ஆனால் தற்போது இந்த போட்டியில் திரில்லர் பட இயக்குனர் ஜெயித்துள்ளார். அவர் கூறிய கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்துப் போன நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி இந்த கூட்டணி நகர்ந்து உள்ளது.

அந்த வகையில் மௌனகுரு, மகாமுனி, ரசவாதி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் தான் விக்ரமின் அடுத்த பட இயக்குனர். இவர் ஏற்கனவே விக்ரமின் தில், தூள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய திரில்லர் சம்பந்தப்பட்ட படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதனாலேயே விக்ரம் இவருடைய கதைக்கு ஓகே சொல்லி கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமுடன் இணையும் திரில்லர் பட இயக்குனர்

Next Story

- Advertisement -