சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அசுரத்தனமாக கம் பேக் கொடுக்கும் விஷால்.. அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்

மத கஜ ராஜா பிரமோஷனில் கை நடுங்கி பேச முடியாமல் நின்ற வீடியோ வைரல் ஆனது. இது படத்திற்கான பிரமோஷன் என்று அவமானப்படுத்தினர் ஒருபுறம்.

மற்றொருபுறம் திவ்யதர்ஷினி ஹை ஃபீவர் இருப்பதாக கூறி சமாளித்தார். ஆனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விஷால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது.

தற்போது ஆர்யா போன்ற நெருங்கிய நண்பர்கள் கூடவே இருந்து பார்த்துக் கொள்கின்றனர். இன்று நடந்த மத கஜ ராஜா வெற்றி விழாவில் பேசிய விஷால் அடுத்தடுத்து நான்கு படங்கள் வரிசை கட்டி நிற்பதாக கூறியுள்ளார்.

மத கஜ ராஜா படத்தின் வெற்றி விஷாலுக்கு 30 கோடிக்கு மேல் வசூல் செய்து பூஸ்ட்டாக அமைந்துள்ளது. இதனை வெளிக்காட்டும் விதமாக மேடையில் உற்சாகமாக பேசி உள்ளார் விஷால்.

கௌதம் வாசுதேவ் மேனன், அஜய் ஞானமுத்து, துப்பறிவாளன் 2, மீண்டும் சுந்தர் சி-விஜய் ஆண்டனி காம்போவில் மொத்தமாக நான்கு படங்களில் நடிக்க உள்ளதாக லிஸ்ட் போட்டு கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கோலிவுட் வட்டாரம் ஆச்சரியப்பட்டு உள்ளது. மீண்டும் அசுரத்தனமான கம் பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் மலைபோல் நம்பி உள்ளனர். இதை காப்பாற்றுவாரா.? பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News