புதன்கிழமை, ஜனவரி 15, 2025

4 கோடி காசு வச்சுட்டு வராதீங்க, தயாரிப்பாளரா கதறிய விஷால்.. சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல

Actor Vishaal: சினிமாவைப் பொறுத்த வரைக்கும் குப்பையில் இருக்கும் ஒருவரை கோபுரத்தில் ஏற்றி வைக்கும், அதே நேரத்தில் கோபுரத்தில் இருந்தவரை இறக்கி குப்பையிலும் போட்டு விடும். எந்த படம் ஜெயிக்கும், எந்த படம் தோற்கும் என யாராலயுமே கணிக்க முடியாது. சின்ன நடிகர்களை நடிக்க வைத்து கோடிக்கணக்கில் பார்த்த தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள், டாப் நடிகர்களுக்கு பணத்தை வாரி இறைத்து கடனில் விழுந்த தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

முகம் தெரியாத தயாரிப்பாளர்களுக்குத்தான் இந்த நிலைமை என்றால், முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக இருப்பவர்கள் சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக ஆக வேண்டும் என்ற ஆசையில் படம் தயாரித்து மொத்தமாய் கடனில் விழுந்து இருக்கும் இடம் தெரியாமல் போனவர்களும் இருக்கிறார்கள். இதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு தான் நடிகையர் திலகம் சாவித்திரி. ஏன் சூப்பர் ஸ்டாரே அவர் தயாரித்த ஒரு சில படங்களில் நஷ்டத்தை தான் சந்தித்தார்.

Also Read:எவ்வளவு அடி வாங்கினாலும் தொடர்ந்து நடிக்கும் 5 ஹீரோக்கள்.. விஷாலுக்கு பயத்தை காட்டிய எஸ் ஜே சூர்யா

இதைப் பற்றித்தான் ஒரு தயாரிப்பாளராக நடிகர் விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். விஷால் தன்னுடைய பெயரிலேயே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அவருடைய படங்களை தயாரித்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் எந்த படங்களுமே விஷாலுக்கு கை கொடுக்கவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து, கடன் பட்டது தான் மிச்சம்.

இதற்காகத்தான் விஷால் அந்த பேட்டியில், உங்கள் கைகளில் பணம் இருந்தால் அதை உங்கள் பிள்ளைகளின் பெயரில் டெபாசிட் பண்ணுங்கள், வேறு ஏதாவது தொழில் செய்யுங்கள் அதை விட்டுவிட்டு படம் தயாரிக்கிறேன் என்ற பெயரில் சினிமாவுக்கு வராதீர்கள். அப்படி வந்தால் இங்கு சல்லி காசுக்கு கூட பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.

Also Read:முதல்முறையாக 100 கோடி கல்லா கட்டிய 11 ஹீரோக்கள்.. 46 வயதில் சாதித்து காட்டும் மார்க் ஆண்டனி

கையில் ஒரு நாலைந்து கோடி வைத்து விட்டு, நானும் படம் தயாரிக்கிறேன் என்று ஒரு ரெண்டு வருஷத்துக்கு யாரும் இந்த பக்கம் வந்துராதீங்க, சொந்த அனுபவத்துல சொல்றேன், இப்போ சினிமா இப்படித்தான் இருக்கிறது என ரொம்பவும் வெளிப்படையாக தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் விஷால்.

நடிகர் விஷாலுக்கு கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் வெற்றி என்பதே கிடைக்கவில்லை. இருண்டு கிடந்த அவருடைய சினிமா கேரியரில் வெளிச்சமாய் வந்த படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் விஷால் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் நிலைமையில் இருக்கிறார். அதனால் தான் தன்னை போன்று யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

Also Read:சிம்புவிடம் ஒரு கோடி எடுத்து வைக்க சொன்ன தயாரிப்பாளர்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதி

Trending News