சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சித் ஸ்ரீராமுக்கு டஃப் கொடுக்கும் நடிகர்.. கொட்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என மறுத்த சித்தா

Actor who gives tough to Sid Sriram: இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மூலம் பின்னணி பாடகராக கடல் படத்தின் மூலம் சித் ஸ்ரீராமுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவருடைய தனித்துவமான குரலால் தொடர்ந்து ஏஆர் ரகுமான் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதன் பின் நானும் ரவுடிதான், 24, அச்சம் என்பது மடமையடா போன்ற பல படங்களில் பாடி இவருடைய குரலால் அனைவரையும் மயக்கி விட்டார்.

அந்த அளவிற்கு ஒரு காந்த ஈர்ப்பு சக்தி இவருடைய குரலுக்கு இருக்கிறது. அதன் மூலம் பிரபலமான பின்னணி பாடகராக வந்து விட்டார். முக்கியமாக அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்தில் கண்ணான கண்ணே என்ற பாடலில் மூலம் ஈர்த்துவிட்டார். அப்படிப்பட்ட இவருக்கே தற்போது டஃப் கொடுக்கும் அளவிற்கு நடிகர் ஒருவருடைய வாய்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அந்த நடிகர் பாடிய பாடல் அந்த அளவிற்கு இருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சித்தார்த். ஆரம்பத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக சினிமாவிற்குள் நுழைந்தார். அதன் பின் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிவிட்டார். தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்று தற்போது தவிர்க்க முடியாத ஹீரோவாக ஜொலித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் வந்த சித்தா மூலம் மக்களுக்கு ஒரு நல்ல கருத்துள்ள படத்தை கொடுத்தார்.

Also read: சைக்கோ மாதிரி பேசி மாட்டிக்கொண்ட 5 பிரபலங்கள்.. நொந்து நூடில்ஸ் ஆன சித்தார்த், ரோபோ சங்கர்

அப்படிப்பட்டவர் பின்னணி பாடகர் ஆகவும் பல பாடல்களை பாடி இருக்கிறார். அந்த வகை தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியன் படம் ஆரம்பித்து தற்போது ஏழு கடல் ஏழுமலை வரை பாடி வருகிறார். இப்படத்தில் உள்ள “மறுபடியும் நீ” என்ற பாடலை பாடிய பொழுது இவருடைய பர்ஃபெக்ஷன் மற்றும் டெடிகேஷன் அனைத்தும் பார்ப்பதற்கு ரொம்ப வியப்பாக இருந்ததாம்.

மேலும் இவர் பாடிய இந்தப் பாடல் ஒட்டுமொத்தமாக பட்டையை கிளப்பி வருகிறதாம். அதுவும் சித் ஸ்ரீராம் எந்த அளவிற்கு ஒரு மேக்னட்டிங் குரலால் பாடி இருப்பாரு அதே மாதிரி சித்தார்த்தம் பாடி இருக்கிறார்.இரவு 8 மணிக்கு போயிட்டு காலையில 5 மணி வரை பாடலில் ஊறி போய் பாடி கொடுத்திருக்கிறார். இதற்கான சம்பளத்தை கொடுத்த பொழுதும் கூட வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

Also read: சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோல்க்கு வந்த 6 ஆர்டிஸ்ட்டுகள்.. சித்தார்த் கேரக்டருக்கு பின் கைதட்டில் வாங்கிய அரவிந்த்

Trending News