திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மரண பயத்தை காட்டிய நண்பன்.. பயங்கர டென்ஷனில் இருக்கும் நடிகர்

கோலிவுட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் பாப்புலராக இருக்கும் அந்த நடிகருக்கு சமீபகாலமாக பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒருபுறம் அவருடைய வாரிசுகளின் வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அதிலும் சமீபத்தில் அவருடைய மூத்த மகளின் விவாகரத்து செய்தி அவரை ரொம்பவே கலக்கமடைய வைத்துள்ளது. இந்நிலையில் அவருடைய நண்பனே தற்போது அவருக்கு போட்டியாக வந்திருப்பது அவரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல வருடங்களுக்கு பிறகு தற்போது உலக நடிகரின் திரைப்படம் வெளியாகி நல்ல கலெக்ஷன் பார்த்து வருகிறது. இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே இந்தத் திரைப்படம்தான் அதிக வசூலையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

தன் நண்பனின் இந்த வளர்ச்சியை பார்த்த நடிகருக்கு தற்போது மிகப் பெரிய பயம் வந்திருக்கிறது. கடந்த தீபாவளி அன்று வெளியான நடிகரின் திரைப்படம் நல்ல வசூலை பெற்று இருந்தாலும் ஏதோ ஒன்று குறையாகவே இருந்தது. இதை கவனித்த நடிகரும் அடுத்த திரைப்படத்தில் அதையெல்லாம் சரி கட்ட வேண்டும் என்று நினைத்தார்.

அதனால் தான் மிகப்பெரிய ஹிட் கொடுத்த அந்த இளம் இயக்குனரை அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த இயக்குனரின் போதாத காலம் சமீபத்தில் அவர் இயக்கிய திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது. இதனால் அந்த இயக்குனரை நம்பி இறங்கலாமா என்ற யோசனையிலும் நடிகர் இருக்கிறார்.

ஆனாலும் எப்படியாவது ஒரு தரமான ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகர் அந்த இயக்குனருக்கு ஏகப்பட்ட அறிவுரைகளை கூறி இருக்கிறார். இயக்குனரும் நடிகருக்கு ஏற்றவாறு கதையை தயார் செய்து வைத்துள்ளார். இந்தப் படத்திற்காக நடிகர் கடும் உழைப்பை கொடுக்கவும் தயாராக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News