வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய்க்கு டஃப் கொடுக்க ரெடியான அஜித்.. இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்

Ajith- Vijay: நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் சமகாலத்து போட்டியாளர்களாக இருந்தாலும், சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் சுவாரசியமான போட்டி என்பது எதுவுமே இல்லை. விஜய் ஒரு பக்கம் அவருடைய ரூட்டில் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். அஜித்குமார் விவேகமாக ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நின்னு அடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் இந்த இரண்டு நடிகர்களுடைய ரசிகர்களுக்குமே இந்த போட்டி சுவாரசியம் இல்லாமல் இருந்தது. பல வருடங்கள் கழித்து துணிவு மற்றும் வாரிசு படம் வெளியானது விஜய் மட்டும் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் விஜய் தன்னுடைய வேகமான பயணத்தை ஆரம்பித்த பொழுது அஜித் மெதுவாக விடாமுயற்சி படத்தை தொடங்கி இருக்கிறார்.

Also Read:மனிதநேயம் கொண்ட அஜித்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

மீண்டும் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி இல்லாமல் போய் விடுமோ என்று பயந்து கொண்டு இருந்த ரசிகர்களுக்கு அஜித் மிகப் பெரிய ட்ரீட் கொடுத்திருக்கிறார். பொதுவாக அஜித் ஒரு படத்தின் வேலையை முடிப்பதற்கு முன் வேறு படத்தில் கமிட்டாக மாட்டார். இதனால் அஜித் சம்பந்தப்பட்ட அப்டேட்டுகள் டீலில் தான் நிற்கும்.

ஆட்டத்தை ஆரம்பிக்கும் நடிகர் அஜித்குமார்

ஆனால் இந்த முறை அஜித் இறங்கி அடிக்க முடிவு செய்துவிட்டார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்த படத்தில் இணைய இருப்பதாக அப்டேட் வெளியானது. அதோடு மட்டுமில்லாமல் அஜித்திற்கு அந்த படத்தில் நடிப்பதற்காக 150 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தன்னுடைய 61வது படத்தில் வாய்ப்பு கொடுக்க இருந்த நிலையில் அது கைகூடாமல் போய்விட்டது. தற்போது அஜித், விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். ஆர்கானிக் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை இந்த படம் பேச இருப்பதாகவும் திரிஷா தான் இந்த படத்திற்கு கதாநாயகி என்றும் சொல்லப்படுகிறது.

விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் டைம் டிராவல் மற்றும் குளோனிங் சம்பந்தப்பட்ட கதை ஆகும். விஜய் இதுவரை இது போன்ற கதைகளில் நடித்ததே இல்லை. இந்த படத்திற்கு பிறகு விஜய் வைத்து இயக்குனர்கள் படம் பண்ண போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அஜித்தும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறார்.

Also Read:அஜித்துக்கு போன் போட சொன்ன விஜய்.. அரசியலை ஆட்டம் காண வைக்க போகும் சம்பவம்

Trending News