புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இருக்கும் இடம் தெரியாமல் போன விஷால், பரத்.. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட பரிதாபம்

நடிகர்கள் விஷால் மற்றும் பரத் இருவருமே சமகாலத்தில் ஹீரோவாக வளர்ந்து வந்தவர்கள். மேலும் அன்றைய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்டார்கள். இருவருடைய கதை தேர்வுகளுமே வெவ்வேறு மாதிரி தான் என்றாலும் இந்த இரண்டு நடிகர்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்போது ரொம்ப அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்.

நடிகர் விஷாலை பொருத்தவரைக்கும் செல்லமே திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும் அவர் நடித்த சண்டக்கோழி, திமிரு, சத்யம் போன்ற ஆக்சன் திரைப்படங்களால் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர். மேலும் நடிகர் பரத்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் காதல் தான். இவர் ஆக்சன் ஹீரோவாக நடிக்காத வரை இவருக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாகவே இருந்தது.

Also Read: அடி மேல, அடி மேல அடி வாங்கும் விஷால்.. அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்

பரத் நன்றாக நடனமாட கூடிய ஒரு ஹீரோ. ரசிகர்களால் சாக்லேட் பாயாக பார்க்கப்பட்ட நடிகர் பரத் திடீரென்று ஆக்சன் ஹீரோவாக களமிறங்கியது தான் அவருடைய சினிமா வாழ்க்கையில் எடுத்த ரொம்பவும் தவறான முடிவு. மேலும் நடிகர் பரத்தாக இருக்கட்டும் அல்லது விஷாலாக இருக்கட்டும் வளர்ந்து வரும் கதாநாயகர்களாக இருக்கும் பொழுதே தங்களுக்கு என்று பட்டங்களை வைத்துக் கொண்டார்கள்.

நடிகர் விஷாலுக்கு புரட்சி தளபதி என்ற பட்டமும், நடிகர் பரத்துக்கு சின்ன தளபதி என்ற பட்டமும் அதிகாரப்பூர்வமாக யார் வழங்கினார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் இவர்கள் தங்கள் பெயரின் பின்னால் இந்த பட்டங்களை சேர்த்துக் கொண்டார்கள். இது நடிகர் விஜய்யை பார்த்து இவர்கள் போட்டுக் கொண்ட சூடு போல் தான் இருந்தது.

Also Read: கேரியரை காப்பாற்றிக்கொள்ள விஷால் போடும் திட்டம்.. விஜய்க்கு மறுப்பு தெரிவிக்க சொன்ன காரணம்

நடிகர் விஜய்க்கு ‘இளைய தளபதி’ என்ற பட்டம் அவர் அடைந்த வெற்றிக்காகவும், அவர் நடித்த படங்களின் வசூலை வைத்தும் கொடுக்கப்பட்டது. ஆனால் நடிகர் விஷாலும், நடிகர் பரத்தும் எப்போது தங்கள் பெயரோடு புரட்சித்தளபதி, சின்ன தளபதி என்று சேர்த்துக் கொண்டார்களோ அப்போதிலிருந்தே இருவரும் தோல்வி படங்களை தான் கொடுத்து வருகிறார்கள். பல வருடங்களாக சினிமாவில் ஒரு வெற்றி படம் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

திரையில் பல வெற்றிகளை பெற்று மிகப் பெரிய ஜாம்பவானாக இருக்கும் நடிகர் அஜித்குமார் கூட தனக்கு கொடுத்த அல்டிமேட் ஸ்டார் என்னும் பட்டத்தை வேண்டாம் என்று உதறித் தள்ளி விட்டார். அதேபோல் வெற்றி நாயகனாக இருக்கும் நடிகர் சூர்யா ஒரு சமயத்தில் அவருக்கு கொடுத்த புரட்சி புயல் என்னும் பட்டத்தை வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனால் நடிகர்கள் பரத்தும், விஷாலும் இப்படி தங்கள் பெயரோடு பட்டங்களை சேர்த்துக் கொண்டது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட நிலைமைதான்.

Also Read: லியோ படத்தில் விஷால் இல்லாதது நல்லது தான்.. தயாரிப்பாளர் கூறிய பதிலை கேட்டு ஷாக்கான லோகேஷ்.!

Trending News