உலகளாவிய மக்கள் பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தும் செயலில் இன்ஸ்டாகிராம். இதில் பிரபல நடிகர், நடிகைகள் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை மிக நெருக்கமாக வைத்துள்ளார்கள். இதனால் பல மில்லியன் பேர் இவர்களை ஃபாலோ செய்கிறார்கள். இதைப் பயன்படுத்தி பாலிவுட் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
ஷாருக்கான்: பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் ஷாருக்கான். இவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 2.7 கோடிக்கு அதிகமானோர் ஃபாலோ செய்கிறார்கள். இவர் இன்ஸ்டாகிராம் ஒரு பதிவிற்கு 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பாதிக்கிறார்.
பிரியங்கா சோப்ரா: கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை அனைத்திலும் நடித்துவரும் பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 7.3 கோடிக்கு அதிகமான பின் தொடர்கிறார்கள். இவர் ஒரு பதிவிற்கு மட்டும் ஏறக்குறைய 1.8 கோடி சம்பளம் பெறுகிறார்.
ஆலியா பட்: பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் இக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. தற்போது இவர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார். ஆலியா பட் ஒரு பதிவிற்கு ஒரு கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவரை 5.8 கோடிக்கு அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.
தீபிகா படுகோண்: பாலிவுட் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவர்தான் தீபிகா படுகோன். இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இவரை 6.4 கோடி பேர் பின் தொடர்கின்றனர். ஒரு பதிவிற்கு 1.5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
அக்ஷய் குமார்: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய்குமார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கிரே என்ற படத்தில் நடித்திருந்தார்.
அக்ஷய் குமாரை 5.9 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள். இவர் ஒரு பதிவிற்கு ஒரு கோடி வரை சம்பளம் பெறுகிறார். இதன் மூலம் அக்ஷய் குமார் பல சொகுசு வீடுகள் வாங்குகிறார்.