புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வா மோதி பார்க்கலாம் என கூறிய சூரி.. எதிர்பார்க்காத புது டிவிஸ்ட், சிம்புவுக்கு வந்த புதிய தலைவலி!

நடிகர் சிம்பு தான் தவறவிட்ட பெயரையும், புகழையும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் திரும்பப் பெற்றே தீர வேண்டும் என்று ரொம்பவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அவருடைய கடின உழைப்புக்கு பரிசாக மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன.

தொடர் வெற்றிகளை பார்த்து வரும் சிம்பு தற்போது பத்து தல என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் முதன்முறையாக நடிகர் கௌதம் கார்த்திக் நடித்திருக்கிறார். சூர்யா, ஜோதிகாவை வைத்து சில்லுனு ஒரு காதல் என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கிருஷ்ணா தான் பத்துதல படத்தை இயக்கியிருக்கிறார்.

Also Read: சிம்பு அகராதியிலேயே முடியாது என நடிக்க மறுத்த காட்சி.. ஷாக்கில் இருந்து மீளாத கௌதம் மேனன்

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

ஆளில்லா தனிக்காட்டு ராஜாவாக மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ரிலீஸ் செய்து வெற்றி பெற்ற சிம்புவுக்கு பெரிய தலைவலியாக பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் அமைந்துவிட்டது. இதற்கு காரணம் நடிகர் சூரி முதன் முதலில் ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படமும் மார்ச் 30 இல் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read: ப்ளூ சட்டையை வெளுத்து வாங்கிய STR விசுவாசிகள்.. அடி மேல் அடி வாங்கும் மாறன்

காமெடி நடிகர் சூரியின் திரைப்படம் தானே என்று அவ்வளவு ஈசியாக சிம்புவால் இருந்து விட முடியாது. ஏனென்றால் விடுதலை, இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படம். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

விடுதலை திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பத்துதல மற்றும் விடுதலை திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது கோலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்றாலும், நடிகர் சிம்புவுக்கு சிக்கல் தான். மீண்டும் வளர்ந்து வரும் நேரத்தில் இதுபோன்ற போட்டிகளால் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் தள்ளாடவும் வாய்ப்பிருக்கிறது.

Also Read: சிம்புக்கு சப்போர்ட் பண்ணிய சேனல், அந்தர் பல்டி அடித்த STR.. எவனையும் நம்பி எதையும் பேசக்கூடாது

Trending News