வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சைலன்ட் மோடில் இருக்கும் விஜய், சூர்யா.. சொன்னதை நிறைவேற்றிய ரஜினியின் சிஷ்யன்

Vijay – Surya: பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள் எல்லாம் சில முக்கியமான விஷயங்களுக்கு வாயை திறக்காமல் எங்களுக்கென்ன என இருப்பது அவருடைய ரசிகர்களுக்கே கடுப்பாகத்தான் இருக்கிறது. அப்படித்தான் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இப்போது தமிழகத்தையே உலுக்கிய ஒரு விஷயத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது அவருடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும் பயங்கர கடுப்பான விஷயமாக மாறி இருக்கிறது.

விஜய் மற்றும் சூர்யா இருவருமே இப்போது முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இருப்பவர்கள். இவர்கள் சொல்வதை தான் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கேட்கும் நிலைமையில் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இவர்களுக்கு ஒரு சில விஷயங்களில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உதவி செய்வதற்கு ஏன் மனம் வரவில்லை என்பது ஒரு மிகப்பெரிய சந்தேகமாகவே இருக்கிறது. ஒரு வேலை இவர்களை காதல் இல்லையா, இல்லை ஏன் செய்ய வேண்டும் என்று இருக்கிறார்களா என்பது தான் புரியவில்லை.

விஜய் மற்றும் சூர்யா வளர்ந்து வந்த காலத்தில் அவர்களுக்கு ஒரு ஏணியாக இருந்து உதவியவர் தான் கேப்டன் விஜயகாந்த். அவர் மட்டும் அந்த காலகட்டத்தில் நமக்கு ஏன் இந்த வேலை, அவர்கள் சொந்த உழைப்பில் முன்னேறி வரட்டும் என்று நினைத்திருந்தால் இப்போது இந்த இரண்டு நடிகர்களின் வளர்ச்சியுமே ஒரு சின்ன தடுமாற்றம் கண்டிப்பாக நிறைந்து இருக்கும். விஜய் மற்றும் சூர்யா கடின உழைப்பினால் தான் முன்னேறி வந்தார்கள் என்று சொன்னாலும் அதில் கேப்டனின் பங்களிப்பும் இருக்கிறது.

Also Read:விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்

இப்படிப்பட்ட கேப்டனின் மகன் சண்முக பாண்டியன் இப்போது சினிமாவில் எப்படியாவது ஒரு ஹீரோ ஆகிவிட வேண்டும் என கடுமையான முயற்சி செய்து வருகிறார். எத்தனையோ பேரை தூக்கி விட்டு விஜயகாந்த், அவருடைய மகன் சினிமாவில் நுழையும் பொழுது சரியான உடல்நிலையோடு இல்லாததால் மகனுக்கு உதவ முடியாமல் போய்விட்டது. தன் மகனை நல்ல ஒரு இடத்தில் பார்க்காமல் அவர் மறைந்து விட்டார்.

ரஜினியின் சிஷ்யன்

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சண்முக பாண்டியன் படத்தில் கண்டிப்பாக தான் நடித்துக் கொடுப்பதாக ராகவா லாரன்ஸ் சொல்லியிருந்தார். ஏதோ ஒரு சூழ்நிலையில் எமோஷனலாக பேசுகிறார் என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஷண்முக பாண்டியன் நடித்துக் கொண்டிருக்கும் படைவீரன் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்கு லாரன்ஸ் மூன்று நாட்கள் கால் சீட் கொடுத்திருப்பதாக தற்போது உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்த் பங்களிப்பால் சினிமாவில் நல்லதொரு இடத்திற்கு வந்த விஜய் மற்றும் சூர்யா அவருடைய மறைவிற்குப் பிறகும் அவருடைய குடும்பத்திற்கு தங்களால் முடிந்த எந்த ஒரு உதவியும் செய்ய முன்வராமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் தன்னை ரஜினியின் ரசிகராக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் இப்படி ஒரு விஷயம் செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

Also Read:விஜய் உடனான சண்டைக்கு தலைவரே வைத்த முற்றுப்புள்ளி..! ஜல்லிக்கட்டு காளையைப் போல் தளபதி கொம்பை சீவி விட்ட தலைவர்

Trending News