வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கைவிட்ட நடிகர்கள், பணம் இல்லாமல் இறந்து போன வெண்ணிலா கபடி குழு நடிகர்.. பப்ளிசிட்டிக்காக இரங்கல் தெரிவித்த கேவலம்

சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் வெண்ணிலா கபடி குழு. விஷ்ணு விஷால், சூரி, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் தற்போது உடல் நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் சூரியுடன் இவரின் காமெடி பயங்கர அலப்பறையாக இருக்கும்.

Also read: கட்டா குஸ்தி படத்தை தூக்கி நிறுத்திய பொன்னியின் செல்வன் பூங்குழலி.. விஷ்ணு விஷாலையே ஓரம் கட்டிய பிரபலங்கள்

10 வருடங்களுக்கு மேலாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்த இவருக்கு சில வருடங்களுக்கு முன் கிட்னி செயல் இழப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் நடப்பதற்கு கூட சிரமப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். அதனால் அவருடைய மனைவி சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும், யாராவது உதவி செய்தால் என் கணவரை காப்பாற்றி விடுவேன் என்றும் உருக்கமாக கூறியிருந்தார்.

hari-vairavan-actor
hari-vairavan-actor

அது மட்டுமல்லாமல் டாக்டர்களும் ஹரி வைரவன் இன்னும் ஆறு மாதங்களுக்கு தான் உயிரோடு இருப்பார் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் எப்படியும் தன் கணவரை காப்பாற்றி விடுவேன் என்று அவருடைய மனைவி நம்பிக்கையுடன் பேசி இருந்தார். இப்போது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஹரி வைரவன் மரணம் அடைந்து விட்டார்.

Also read: விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி எப்படி இருக்கு.. விறுவிறுப்பாக வெளிவந்த டுவிட்டர் விமர்சனம்

இவருடைய மரணத்திற்கு தற்போது வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். இந்த படத்தின் மூலம் இன்று முன்னணியில் இருக்கும் விஷ்ணு விஷால், சூரி போன்றவர்கள் இவருக்கு உதவி செய்திருந்தாலே இவர் காப்பாற்ற பட்டு இருப்பார். பணம் இல்லாமல் போன ஒரே காரணத்தினால் இவர் உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் உதவி செய்யாமல் இவரை கைவிட்டு விட்டு இப்பொழுது பப்ளிசிட்டிக்காக இரங்கல் தெரிவித்திருப்பது தான் கேவலம். காசு கொடுக்க துப்பில்லாமல் இப்போது முதல் ஆளாக இரங்கல் மட்டும் எதற்காக தெரிவிக்கிறீர்கள் என ரசிகர்கள் தற்போது தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: பிட்டு பட லெவெலுக்கு பப்ளிசிட்டிக்காக போஸ் கொடுத்த கணவன்.. வெட்கமில்லாமல் போட்டோ எடுத்த 2ம் மனைவி

Trending News