ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பந்தாவே இல்லாமல் தோளில் கைபோட்டு சகஜமாய் பழகும் 6 நடிகர்கள்.. கட்டிப்பிடித்து கன்னத்தை கடிக்கும் அக்கட தேச நடிகர்

ரசிகர்களால் தான் சினிமாவில் பிரபலங்கள் ஜொலிக்க முடிகிறது. ஆனால் சிலர் தங்களை பார்க்க வரும் ரசிகர்களை அவமதிக்கின்றனர். ஆனால் சில நடிகர்கள் பந்தா இல்லாமல் ரசிகர்களில் தோளில் கைபோட்டு பழகுகின்றனர். அவ்வாறு உள்ள 6 நடிகர்களை இப்போது பார்க்கலாம் .

விஜய் சேதுபதி : தமிழ் சினிமாவில் தற்போது பிசியாக உள்ள நடிகர் விஜய் சேதுபதி. இவர் கொஞ்சமும் தலைகனம் இல்லாத நடிகர். இவர் தன்னுடைய ரசிகர்களிடம் நண்பரைப் போல் பழகுவார். ஒருமுறை பெண் ரசிகை இவருக்காக ஆசையாக சமைத்த சாப்பாடையும மறுக்காமல் சாப்பிட்டார்.

நாக சைதன்யா : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் நடிகை சமந்தாவை திருமணம் இவர் நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். நாக சைதன்யாவும் பாரபட்சம் பார்க்காமல் ரசிகர்களுடன் மிக நெருக்கமாக பழக கூடியவர்.

அல்லு அர்ஜுன் : அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் சக்கை போடு போட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் தன் ரசிகர்களுடன் நண்பர் போல பழகுவார்.

ராம் பொத்தினேனி : தெலுங்கு சினிமாவின் பல வெற்றி படங்களை கொடுத்தவர் ராம் பொத்தினேனி. இவர் ரசிகர்களுடன் இயல்பாக பழக கூடியவர். எந்த அளவுக்கு என்றால் கட்டிப்பிடித்து கடிக்கும் அழகுக்கு நெருக்கமாகப் பழக கூடியவர். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

ஜிவி பிரகாஷ் : இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் எல்லோரிடமும் இயல்பாக பேசக்கூடியவர். தன்னுடைய ரசிகர்களிடம் சகஜமாகவும், மகிழ்ச்சியாகவும் பேசி புகைப்படங்களை எடுத்துக்கொள்வார்.

ஆர்யா : ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆர்யாவுக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்கள் அதிகம். இவரும் தன் ரசிகர்களை பாரபட்சமில்லாமல் தோழன் போல பழகுவார்.

Trending News