புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விசித்திரமான குரலை வைத்து வெற்றிகண்ட 6 நடிகர்கள்.. மிரட்டியே வாய்ப்பை அள்ளிய அர்ஜுன் தாஸ்

சினிமாவைப் பொருத்தவரை நடிப்பு, அழகு ஆகியவற்றை தாண்டி குரல் வளத்தினால் பிரபலமடைந்தவர்கள் உள்ளனர். சில நடிகர், நடிகைகளுக்கு மொழி மற்றும் குரல் பிரச்சனைகளால் டப்பிங் ஆர்டிஸ்ட் வைத்த குரல் கொடுக்கப்படுகிறது. ஆனால் சிலர் தங்களுடைய தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

சுருளிராஜன் : சுருளிராஜன் நகைச்சுவை நடிகராக அனைவராலும் அறியப்படுபவர். இவர் 60, 70 களில் பல படங்களில் நடித்திருந்தார். தன்னுடைய தனித்துவமான குரலால் பலரையும் சிரிக்க வைத்தார். புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தனது 42வது வயதில் 1980 இல் காலமானார்.

கல்லாப்பெட்டி சிங்காரம் : இவர் பெரும்பாலும் பாக்யராஜ் இயக்கும் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சுவரில்லாத சித்திரங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சற்று வித்தியாசமான குரல் வளம் உடையவர்.

kallapetti singaram
kallapetti singaram

மொட்டை ராஜேந்திரன் : இவர் பெரும்பாலான படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவர் ராஜா ராணி, சிங்கம் 2,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான் போன்ற படங்களில் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன் கரகர என்ற குரல் வளம் உடையவர்.

விடிவி கணேஷ் : நடிகர் சிம்புவின் பெரும்பாலான படங்களில் நடித்திருப்பவர் விடிவி கணேஷ். இவர் சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவருடைய தயாரிப்பில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அனைவருக்கும் பரிச்சயமானர். அதில் இவருடைய இங்க என்ன சொல்லுது ஜெசி ஜெசி சொல்லுடா என்ற வசனம் மிகவும் பிரபலம். இவருடைய பாஷை மற்றும் குரல் வித்தியாசமாக இருக்கும்.

விஐஎஸ் ஜெயபாலன் : ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் என்ற கதாபாத்திரம் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜெயபாலன். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவருடைய தனித்துவமான குரலும் இவர் நடிப்புக்கு இன்னும் அழகு சேர்த்தது. இவர் ஆடுகளம் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

jayabalan
jayabalan

அர்ஜுன் தாஸ் : கார்த்தியின் கைதி படத்தில் வில்லனாக அன்பு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். இவர் தனது பேஸ் பாரிடோன் குரலுக்காக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த கமலஹாசனின் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.

Trending News