Actress Aishwarya rai first movie iruvar directed by mani ratnam : ஏழு அதிசயங்களுடன் எட்டாவது அதிசயமாக சகல ஐஸ்வர்யமும் பொருந்தி இருக்கும் இந்த ஐஸ்வர்யா ராய் மௌனத்தின் மூலம் காதலை கடத்தி பார்வையாளர்களை கண்களால் கைது செய்பவர்.1994 ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகிபட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், இன்று பார் போற்றும் பெண்ணாக பல மொழிகளிலும் நடித்து வெற்றி மங்கையாக திகழ்ந்து வருகிறார்.
தமிழ், ஹிந்தி, பெங்காலி போன்ற பல மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யாராய்க்கு அவர் எதிர்பார்த்த முதல் படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.
தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் படத்தில் முதன்முறையாக அறிமுகமானார். தமிழக அரசியலை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தில் எம்ஜிஆரின் துணைவியாகவும், காதலியாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.
உலக அழகி பட்டத்திற்கு பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இருவர் திரைப்படம் ஐஸ்வர்யாராய்க்கு கை கொடுக்காமல் போனதோடு, ரசிகர்கள் இடையே பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் மனம் உடைந்து போனார் ஐஸ்வர்யா. பின்பு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் ஒப்பந்தமானார் ஐஸ்வர்யா.
அதிசயமே அதிசயிக்கும் வண்ணம் ஐஸ்வர்யா ராய்யை எட்டாவது அதிசயமாக இணைத்து ஜீன்ஸ் படத்தின் மூலம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஐஸ்வர்யா ராய் மீது அனைவரின் பார்வையும் பதியுமாறு செய்தவர் சங்கர். இதற்குப் பின் தொடர்ந்து ஏறுமுகம் தான். தமிழிலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் என இன்று வரை பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.
ஆயிரம் பிறை காண உள்ள இந்த அபூர்வ சிந்தாமணி வயது ஆனாலும் தனக்குரிய தனித் தன்மையை விட்டு விடாமல் இன்றும் இளமையுடன் வெற்றி நடை போட்டு வருகிறார்.
Also read: 30 வயதுக்குள் மறைந்த 5 நடிகைகள்.. மிகக் கொடூரமா இறந்த விஜயகாந்தின் 2 ஹிட் ஹீரோயின்கள்