புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஐஸ்வர்யா ராய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டான 4 படங்கள்.. சங்கர் சூப்பர் ஸ்டாரை வைத்து விட்ட தூது

Actress Aishwarya Rai gave four blockbuster hits: முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் தமிழில் நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த காலகட்டத்தில் சங்கர் தன்னுடைய படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும் என்று ரஜினியை வைத்து தூது விட்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.

ஜீன்ஸ்: பெண்களே பார்த்து பொறாமை படக்கூடிய பேரழகியாக இருந்த ஐஸ்வர்யா ராய், 1997ல் மணிரத்தினம் இயக்கிய இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதே வருடம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் ஐஸ்வர்யா ராயின் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம் என்றால் அது சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படம் தான். இந்த படத்தில் டபுள் ஆக்ஷனில் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டினார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: 2000 ஆம் ஆண்டில் ராஜீவ் மோகன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் மம்மூட்டி, அஜித், அப்பாஸ், தபு இவர்களுடன் ஐஸ்வர்யாராய் இணைந்து நடித்து ஹிட் கொடுத்த படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அப்பவே 25 கோடியை வாரிக் குவித்தது.

முதலில் ஐஸ்வர்யா ராய் அப்பாசை காதலித்து, அதன் பின் அவரால் ஏமாற்றமடைந்து வயது வித்தியாசம், அழகு என எதையுமே பொருட்படுத்தாமல் மம்முட்டியின் குணத்தை பார்த்து, ஊனமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவரை திருமணம் செய்து கொள்வார். இதில் ஐஸ்வர்யா ராயின் உணர்வுபூர்வமான நடிப்பை பார்க்க முடிந்தது.

Also Read: பல வருட சினிமா ட்ரெண்டை மாற்றிய 5 இயக்குனர்கள்.. அவெஞ்சர்ஸையே மிரள வைத்த ரஜினி

ஐஸ்வர்யா ராய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டான 4 படங்கள்

எந்திரன்: அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார் ஐஸ்வர்யா ராய். இருப்பினும் எந்திரன் படத்தில் சனா என்ற கேரக்டரை ஷங்கர் ஐஸ்வர்யாராயை மனதில் வைத்து தான் எழுதியதால், அவரை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்தார். ஐஸ்வர்யாராய் ரஜினியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதால் அவரை தூது அனுப்பி ஐஸ்வர்யா ராய் இடம் இந்த படத்தில் நடிப்பதற்காக சம்மதம் வாங்கி விட்டார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

பொன்னியின் செல்வன்: மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கற்பனை கதாபாத்திரத்தில் தான் ஐஸ்வர்யா ராய் நடித்தார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் நந்தினி கேரக்டர் இருக்காது. ஆனாலும் வில்லி, ஹீரோயின் என சரி பாதியாக இருந்த இந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் கச்சிதமாக நடித்தார்.

இவருடைய கண் அசைவு, தோற்றம் என நந்தினியாக இருந்த ஐஸ்வர்யா ராயை ரசிகர்கள் கண்ணிமைக்காக பார்த்தனர். இரண்டு பாகங்களாக வெளியான இந்த படம் வசூலிலும் தாறுமாறாக பட்டையயை கிளப்பி, சூப்பர் ஹிட் ஆனது.

Also Read: விடாமுயற்சி படத்தின் கதாநாயகி யார்? வரிசையாக 5 நடிகைகளை களமிறக்கியுள்ள லைக்கா

Trending News