புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஐஸ்வர்யா ராய்-க்கு இப்படி ஒரு வெறிபிடித்த காதலரா.? கல்யாணம் இல்லாமல் பிள்ளை பெத்துக்கணும்

நடிகை ஐஸ்வர்யா ராய், கிட்டத்தட்ட இவர் உலக அழகி பட்டம் வாங்கி முப்பது வருடங்களை நெருங்கப் போகிறது. இருந்தாலும் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இன்று வரைக்கும் இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்று தான் அடையாளப்படுத்தப்படுகிறார். அழகு மட்டும் இல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பினாலும் ஐஸ்வர்யா ராய் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் அழகு ராணியாக இவர் இன்றும் இருந்து வருகிறார்.

திருமணம் ஆகி கணவன் மற்றும் குழந்தை என்று செட்டிலான ஐஸ்வர்யா ராய்க்கு 40 வயதை கடந்த நிலையிலும் இன்று வரை அதே அழகு அப்படியே மெருகேறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பல வருட இடைவெளிக்குப் பிறகு இவர் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய அழகால் மெய் மறக்க வைப்பதற்கு என்றே நடித்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். ஏற்கனவே அந்த புத்தகத்தை படித்தவர்களுக்கு நந்தினியின் மீது அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த நந்தினிக்கு உருவம் கொடுத்தார் ஐஸ்வர்யா.

Also Read:ராஜமௌலியிடம் உதவி இயக்குனரா கத்துக்கோங்க.. மணிரத்தினம், சுஹாசினியை கிழித்து தொங்க விட்ட பிரபலம்

தன்னுடைய அழகால் அனைவரையும் மயக்கும் நந்தினி கதாபாத்திரமாக இருக்கட்டும், வயதான மந்தாகினி தேவியாக இவர் நடித்த இரண்டு, மூன்று காட்சிகளாக இருக்கட்டும் அப்படியே ரசிகர்கள் மனதில் அழுத்தமாக ஒரு முறை பதிந்து விட்டார். ஐஸ்வர்யா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்கு முன்னால் இவருக்கு சில காதல் கதைகளும் இருந்தது.

ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினாக இருக்கும் பொழுது அவருக்கு நடிகர் சல்மான் கான் மீது காதல் ஏற்பட்டது அனைவரும் அறிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் டேட்டிங் கலாச்சாரத்தில் இருந்தார்கள். அப்போதைய மீடியா இது பற்றி பல செய்திகளை வெளியிட்டது. அதன் பின்னர் இருவரும் தங்களுடைய உறவை முறித்துக் கொண்டனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் சல்மான் கானின் மூர்க்க குணம் என்று ஐஸ்வர்யா ராய் தன்னுடைய பேட்டி ஒன்றை சொல்லி இருந்தார்.

Also Read:வசூல் சாதனை படைக்கும் சோழர்கள்.. பொன்னியின் செல்வன் 2 கலெக்சனை வெளியிட்ட ஆதித்த கரிகாலன்

வன்முறை அதிகம் நிறைந்த அந்த உறவில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா ராய் அதன் பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என நன்றாக வாழ்ந்து வருகிறார். ஆனால் சல்மான்கானோ 50 வயதை கடந்த நிலையிலும் அடுத்தடுத்து காதலிகளை மாற்றி வந்தாரே தவிர அவர் திருமண உறவுக்குள் நுழையவில்லை. ஒவ்வொரு காதல் தோல்விக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி அவர் நகர்ந்து கொண்டுதான் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சல்மான் என்னுடைய காதலிகள் அனைவருமே ரொம்பவும் நல்லவர்கள் தான், இந்த காதல் தோல்விகள் அனைத்திற்கும் காரணம் நான் மட்டுமே என்பது எனக்கு பின்னர் தான் புரிந்தது. எனக்கு ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்க வேண்டும் என்ற ஆசை தற்போது வந்திருக்கிறது. ஆனால் திருமணம் ஆகாத ஒருவர் ஒரு குழந்தைக்கு தந்தையாவதை நம் சட்டம் ஏற்றுக் கொள்ளாது என்று ரொம்பவும் மனம் உருகி பேசி இருக்கிறார்.

Also Read:இணையத்தை கலக்கும் வானதி-பூங்குழலி.. படு கிளாமராக பொன்னியின் செல்வன் ஹீரோயின்ஸ்

Trending News