வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாக்யராஜ் பட ஹீரோயின்.. நொந்து நூடுல்ஸ் ஆன சம்பவம்

நடிகைகளில் சிலர் சினிமாவில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறார்களோ, புகழோடு இருக்கிறார்களோ அது எல்லாத்தையும் தாண்டி அவர்களது சொந்த வாழ்க்கையை பார்க்கும் பொழுது சம்பாதித்த பணம், புகழ், சொத்து இருந்தும் ரொம்பவும் வெறுமையாகவே இருப்பார்கள். சிலர் சொத்துக்களை கூட இழந்து ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுவார்கள்.

இது போன்ற நடிகைகள் தங்களுடைய தோல்வியையும், வெறுமையையும் சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் தவறான பழக்கங்களில் கூட விழுந்து விடுவார்கள். அப்படி ரஜினிகாந்த், விக்ரம், பாக்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களோடு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

Also Read: பலமுறை பார்த்தாலும் சலிப்புதட்டாத பாக்யராஜின் 5 படங்கள்.. தியேட்டர்களுக்கு படையெடுக்க வைத்த முருங்கைக்காய் ஸ்பெஷலிஸ்ட்

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர்தான் நடிகை லட்சுமி. இவருடைய ஒரே மகள் தான் ஐஸ்வர்யா. சினிமாவில் நடிகை லட்சுமி அளவுக்கு ஐஸ்வர்யா ஜொலிக்கவில்லை என்றாலும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் தனக்கான ஒரு அடையாளத்தை வைத்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், எப்போது வேண்டுமானாலும் குடிப்பேன் என்றும், காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டும் என்று தோன்றினாலும் உடனே குடித்து விடுவேன் என்றும், தற்போது அந்த பழக்கத்திலிருந்து வெளியே வந்து விட்டதாகவும், மன அழுத்தத்திற்காக மருத்துவரை சந்தித்து மெடிடேஷன் கூட செய்ததாகவும் கூறி இருக்கிறார்.

Also Read: பாக்யராஜ் செய்த மிகப்பெரிய சாதனை.. 40 ஆண்டு காலமாக யாராலும் முறியடிக்கவில்லை

இதற்கு முந்தைய பேட்டிகளில் கூட தனக்கென்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் , தன்னுடைய அம்மா லட்சுமியிடமும் பேசுவதில்லை என்றும் சொல்லியிருந்தார். பண தேவைக்காக ஐஸ்வர்யா வீடு வீடாக சென்று அவர் வீட்டிலேயே தயாரிக்கும் சோப்புக்களை விற்று வருவதாகவும் கூறினார்.

ஐஸ்வர்யாவை பொறுத்தவரை ஹீரோயினாக ஜொலிக்கவில்லை என்றாலும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆறு படத்தில் இவர் நடித்த சரோஜா கேரக்டர் யாராலும் மறக்க முடியாது. ஐஸ்வர்யா தற்போது சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் சமையல் மற்றும் யோகாசனம் பற்றி வீடியோ பதிவிட்டு வருகிறார்.

Also Read: கடைசிவரை பெயர் தெரியாமல் நடிப்பினாலேயே மனதில் நின்ற நடிகர்.. விடாமல் வாய்ப்பு கொடுத்த பாக்யராஜ்

Trending News