புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நிறைமாத கர்ப்பிணியாக அமலா பால் செய்யும் அலப்பறை.. முதல் கணவரை வெறுப்பேற்ற வெளியிட்ட புகைப்படம்

இயக்குனர் ஏ எல் விஜய்யுடன் விவாகரத்தாகி 5 வருடத்திற்கு பிறகு தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், கல்யாணமான ஒரே மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் வெளியிட்டார். இதனால் திருமணத்திற்கு முன்பே அமலாபால் கர்ப்பமாகிவிட்டதாகவும், அதனால் தான் அவசர அவசரமாக கல்யாணம் செஞ்சுக்கிட்டதாகவும் கூறப்பட்டது.

இவர் இரண்டாவது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கர்ப்ப காலத்தை அணு அணுவாக ரசித்து வருவது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது. அதிலும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலாபால் மெடிடேஷன் செய்வதும், அவருடைய கணவனுடன் ரொமான்டிக் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து அப்லோட் செய்கிறார்.

கடலோரத்தில் நிற்கும் நிறைமாத கர்ப்பிணி அமலா 

actress-amala-paul-shared-baby-bump-cinemapettai
actress-amala-paul-shared-baby-bump-cinemapettai

இப்போது அவர் வெள்ளை நிற உடையில் கடலோர பகுதியில் நின்றபடி தன்னுடைய நிறைமாத வயிற்றை காட்டும் சில புகைப்படங்களையும், கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

Also Read: அழகான மருமகள்களாக தோன்றி, அசரவைத்த 4 நடிகைகள்.. இளசுகளை கிரங்கடித்த சூப்பர் ஸ்டாரின் மருமகள்

அமலாபாலின் நிறைமாத புகைப்படம்

இதை பார்க்கும் நெட்டிசன்கள் நிறை மாதத்தில் கூட உங்க அலப்பறை குறையாம இருக்கு! என்று கிண்டலடிக்கின்றனர். அதோடு ரசிகர்கள் பலர், ‘அதற்குள் வயிறு இவ்வளவு பெருசாகி விட்டதா!’, ‘உங்களுக்கு எத்தனை மாதங்கள் ஆகிறது?’ ‘குழந்தை பிறக்கும் டேட் என்ன?’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர்.

கர்ப்ப காலத்தில் இந்த அளவுக்கு நெருக்கத்துடன் அமலா பால் புகைப்படம் வெளியிடுவதற்கு காரணம் என்ன என்பது இப்போ தெரிஞ்சிருச்சு. தன்னுடைய முதல் கணவர் வேறொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகி விட்டதால், அவரை வெறுப்பேற்றுவதற்காக தான் இப்போது நிறைமாதத்தில் கூட கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு அமலாபால் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்.

நிறை மாதத்தில் கூட அமலாபால் செய்யும் அலப்பறை

amala-paul-and-her-husband-cinemapettai
amala-paul-and-her-husband-cinemapettai

Also Read: சாமி படம் என்று போனால் சாக வேண்டியது தான்.. முகம் சுளிக்க வைத்த 5 மோசமான தமிழ் அடல்ட் படங்கள்

Trending News