கர்ப்பிணியாக குட்டி நயன்தாராவின் அடுத்த படம்.. ஒரு மார்க்கமாக இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக இயக்குனர் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்று படத்தை தயாரித்துக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரிலீசாகி ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த போஸ்டரில் தமிழ் சினிமாவிற்கு என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது இளம் கதாநாயகியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இதில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருப்பதாக ஃபர்ஸ்ட் லுக் ஃபர்ஸ்ட் போஸ்டரைப் பார்த்தால் தெரிகிறது. ஏற்கனவே அனிகா சுரேந்திரன் ‘மா’ என்ற குறும்படத்தில் வயதுக்கு வந்த சிறுமி கர்ப்பிணி ஆகுவது போன்றும், அதை அறிந்து கொள்ளும் தாய் அந்த சிசுவை கலைத்து விடுவது போன்றும் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆகிறார்.

அதேபோல மீண்டும் அனிகா சுரேந்திரன் மட்டுமல்லாமல் வனிதா விஜயகுமார், நடிகை சீதா இவர்களுடன் மற்றொரு நடிகை என நான்கு பேர் வரிசையாக நிறைமாத கர்ப்பிணியாக அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நிற்கின்றனர். இவர்களது வரிசையில் நீயா நானா கோபியும் முதல் நாளாக நிற்கிறார். இந்த படத்தின் டைட்டில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்பதால் கோபிநாத், வாசு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? அவர்தான் இந்த படத்தின் கதாநாயகனா? என்றெல்லாம் ரசிகர்கள் தொடர்ந்து இந்த போஸ்டரை பார்த்த பிறகு கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.

அதுமட்டுமின்றி சற்று உடல் பருமனுடன் தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் கோபிநாத், அவரும் கர்பமாக இருக்கிறாரா என்றும் கிண்டல் அடிக்கின்றனர். ஒரு ஆண் நான்கு கர்ப்பிணி பெண்கள் நிற்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்படும் மெட்டீரியலாகவே மாறி இருக்கிறது.

anika-first-look-poster-cinemapettai
anika-first-look-poster-cinemapettai

இதற்கும் பத்தாமல் பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும் இந்த போஸ்டரை வனிதா விஜயகுமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘டெலிவர் சூன்’ என்ற கேப்சர் உடன் பதிவிட்டிருக்கிறார். வாசுவின் கர்ப்பிணிகள் திரைப்படம் பெண்களை ஏமாற்றி கர்ப்பிணியாக்கும் நாசகாரர்களை தோலுரித்துக் காட்டும் கதைக்களமாக இருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.

மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை சீதா கன்னியாஸ்திரி கெட்டப்பில் கர்ப்பமாக இருப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. மேலும் விமர்சிக்கப்படுகிறது. ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தபிறகு இந்தப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் காட்சிகளை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →