Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

Vijay : கப்பு முக்கியம் பிகில்.. சீமானுடன் விஜய்யை கூட்டணி வைக்க சொல்லும் அல்வா நடிகை

Vijay : கப்பு முக்கியம் பிகில்.. சீமானுடன் விஜய்யை கூட்டணி வைக்க சொல்லும் அல்வா நடிகை

தளபதி விஜய் இப்போது சினிமாவை காட்டிலும் அரசியலில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். ஏனென்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டி போட உள்ள நிலையில் முழு அரசியல்வாதியாக செயல்பட இருக்கிறார். அதன்படி 2026 ஆம் ஆண்டு […]

தளபதி விஜய் இப்போது சினிமாவை காட்டிலும் அரசியலில் தான் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். ஏனென்றால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டி போட உள்ள நிலையில் முழு அரசியல்வாதியாக செயல்பட இருக்கிறார்.

அதன்படி 2026 ஆம் ஆண்டு விஜய்யின் கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட இருக்கிறது. இந்த சூழலில் விஜய்யுடன் சீமான் கூட்டணி போட்டால் கண்டிப்பாக கப்பு பிகிலுக்கு தான் என்று சொல்கிறார் நடிகை கஸ்தூரி.

அதாவது நாம் தமிழர் கட்சியை நடத்தி வரும் சீமான் ஜாதியை விரும்பாதவர். தனது கொள்கைக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதேபோல் விஜய்யும் ஜாதியை விரும்ப மாட்டார். ஏனென்றால் பல தரப்பினர் தான் விஜய்யின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அரசியலைப் பற்றி நடிகை கஸ்தூரியின் பார்வை

இதில் ஜாதி அரசியல் என்று ஒன்று இருக்காது. அதோடு விஜய்யின் அம்மா மற்றும் அப்பா என இருவருமே வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அவரது மனைவி சங்கீதா ஈழ தமிழ் இனத்தைச் சேர்ந்தவர். அதனால் விஜய்யின் கொள்கையும் வேறாக தான் இருக்கும்.

மேலும் விஜய் சினிமாவிலேயே நிறைய சம்பாதித்து விட்டார். அவர் அரசியலுக்கு வந்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. கண்டிப்பாக விஜய் மற்றும் சீமான் கூட்டணி போட்டால் கண்டிப்பாக மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இவர்களது அரசியலில் ஊழல் இருக்காது.

கண்டிப்பாக ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு தர மாட்டார்கள். சொல்லப்போனால் நானும் விஜய்யின் தீவிர ரசிகன் தான். கோவிட் தொற்றுக்கு முன்பு விஜய் படங்கள் வெளியாகும் போது முதல் ஷோவே பார்த்துவிடுவேன். மேலும் சீமானின் ஜாதி இல்லாத அரசியலும் தனக்கு ரொம்ப பிடித்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.