அறிமுகமான படத்திலேயே அனைவரையும் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் சுண்டி இழுத்தவர்தான் அந்த நடிகை. அதைத்தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே செல்வாக்கு மிக்க அந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதற்கேற்றார் போல் படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.
அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அந்த வகையில் குறுகிய காலத்திலேயே நடிகை அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார். இதனால் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த வேளையில் நடிகை திடீரென வேறு மொழி பக்கம் கவனத்தை திருப்பினார்.
அங்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் தமிழ் பக்கமே இனி வரமாட்டேன் என்ற முடிவில் இருக்கிறாராம். ஏனென்றால் நடிகையுடன் இணைந்து நடித்த அந்த டாப் ஹீரோ இவருக்கு வேறு விதமாக டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அட்ஜஸ்ட்மென்ட் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று நடிகை தெளிவாக கூறியிருக்கிறார்.
Also read: போதைக்கு அடிமையாகி கேரியரை இழக்கும் நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சிகிச்சை
ஆனாலும் விடாத அந்த ஹீரோ அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். அதனால்தான் நடிகை இப்போது வாய்ப்புகள் வந்தால் கூட அதை வேண்டாம் என்று மறுக்கிறாராம். ஆனாலும் நடிகைக்கு பல மடங்கு சம்பளம் கொடுக்கிறோம் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் முன்வருகிறார்களாம்.
விசாரித்துப் பார்த்ததில் நடிகை யாருக்கு பயந்து வேறு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தாரோ அந்த நடிகர் தான் இப்படி சில ஆட்களை நியமித்து நடிகையை கட்டம் கட்டி வருகிறாராம். இதற்கெல்லாம் மசியாத அந்த நடிகை தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். ஆனாலும் தற்போது பெரிய அந்தஸ்தில் இருக்கும் அந்த ஹீரோ நினைத்ததை நடத்தி காட்டி விடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
Also read: பண மோசடி, போதை பொருள் வழக்கு.. மீண்டும் கிளம்பிய பிரச்சனையால் பதட்டத்தில் இருக்கும் நடிகை