Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சித்ரா குறித்து பரவும் வதந்திகள்.. மறுவிசாரணை செய்ய பெற்றோர்கள் கோரிக்கை

சித்ரா குறித்து பரவும் வதந்திகள்.. மறுவிசாரணை செய்ய பெற்றோர்கள் கோரிக்கை

கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு அரசியல் புள்ளிகளால் தொல்லை ஏற்பட்டதாகவும் அது தான் அவரின் மரணத்திற்கு காரணம் எனவும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் […]

கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு அரசியல் புள்ளிகளால் தொல்லை ஏற்பட்டதாகவும் அது தான் அவரின் மரணத்திற்கு காரணம் எனவும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறார்.

மேலும் சின்னத்திரை நடிகை ரேகா நாயர், சித்ரா குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் அதாவது அவருக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்ததாகவும், சித்ரா அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் தெரிவித்து வருகிறார்.

இது பற்றி எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த சித்ராவின் பெற்றோர் தற்போது ஆதங்கத்துடன் ஒரு பேட்டியில் பேசியுள்ளனர். அதில் ரேகா நாயர், சித்ரா குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவதாகவும், சித்ரா அப்படி எல்லாம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஹேம்நாத் தான் சித்ராவை அடித்து கொலை செய்திருக்கிறார். சித்ராவின் கழுத்தில் தூக்குப்போட்டு கொண்டதற்கான எந்த தடயமும் இல்லை. அதற்கு மாறாக அவருடைய உடலில் சில காயங்கள் இருந்ததாகவும், அதனால் அவர் அடித்துதான் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

இதனால் இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று நினைக்கும் சித்ராவின் பெற்றோர் இது குறித்து முதல்வரிடம் புகார் அளிக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இதன் மூலம் சித்ராவின் மரணத்தில் என்ன நடந்தது என்பது விரைவில் நிரூபிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள சித்ராவின் கணவர் இந்த தற்கொலை பற்றி வேறு விதமாக கூறிவரும் நிலையில், சித்ராவின் பெற்றோர்கள் இப்படி ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டு இருப்பது அவரின் மீதான சந்தேகத்தை வலுக்க செய்துள்ளது. எது எப்படி இருந்தாலும் சித்ராவின் மரணத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.